/* */

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட விடமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட ஒரு போதும் விடமாட்டோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

HIGHLIGHTS

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட விடமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து முடிந்துள்ள வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம்என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் நேரு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு முடிந்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் கார் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார். இன்று காலை தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் கிளை வாய்க்கால்களில் நடைபெற்றுள்ள தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் அங்குள்ள விவசாயிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

தஞ்சாவூரில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு முடித்த பின்னர் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் கூழையாற்றில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த பிறகு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்டாவின் உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசாக தி.மு.க .அரசு தொடர்ந்து செயல்படும். அதேபோல், காவிரி டெல்டாவின் வேளாண் வளர்ச்சிக்கும், இந்தப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரவும் முன்னுரிமை அளித்து இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்காவிரியில் உள்ள பாசன கால்வாய்களைத் தூர்வாரும் பொருட்டு கடந்த 2021-22ம் ஆண்டில், 62 கோடியே 91 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3,859 கி.மீ தூரமுள்ள கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.

மேட்டூர் அணை பாசனத்துக்காக திறந்துவிடப்படக்கூடிய நாளான ஜூன் 12ம் தேதியன்று அணை திறக்கப்பட்டது. அதோடு வேளாண் பெருமக்களுக்கான பல்வேறு உதவிகள் எல்லாம் வழங்கப்பட்டது. இதன்விளைவாக காவிரி டெல்டா பகுதியில் வரலாற்று சிறப்பான சாதனையை நாம் எட்டினோம். 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியும், 13 லட்சத்து 341 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு, 39 லட்சத்து 73 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப்பெரிய சாதனை படைக்கப்பட்டது.

விவசாயிகளின் உரிமைகளை விட்டுக் கொடுக்காத அரசாக திமுக அரசு செயல்படும். விவசாயிகளுக்கு அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்றன. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம். வீட்டு மின் இணைப்பு கட்டணத்தில் எந்த உயர்வும் இல்லை. பல்கலைக்கழக வேந்தராக முதல் அமைச்சர்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 10 Jun 2023 5:13 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...