/* */

மு.க.ஸ்டாலின் இளமை ரகசியம் குறித்து அடுத்த புத்தகத்தில் வெளியிட வேண்டும் -ராகுல் காந்தி

தொன்மை வாய்ந்த தமிழகத்தில் எதையும் திணிக்க முடியாது: முதல்வரின் புத்தக வெளியீடு விழாவில் ராகுல் காந்தி

HIGHLIGHTS

மு.க.ஸ்டாலின் இளமை ரகசியம் குறித்து அடுத்த புத்தகத்தில் வெளியிட வேண்டும் -ராகுல் காந்தி
X



தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் "உங்களில் ஒருவன்" என்ற பெயரில் தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார். 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகள் இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன. "உங்களில் ஒருவன்" நூலின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை - நந்தம்பாக்கத்தில் உள்ள 'சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில்' நடைபெற்றது.


காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய நூலை வெளியிட்டார். இந்த நிகழ்வில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர்-ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


"உங்களில் ஒருவன்" நூலை ராகுல் காந்தி வெளியிட, திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் பேசிய ராகுல் காந்தி,

எனது சகோதரர் மு.க.ஸ்டாலின் அருமையான புத்தகத்தைக் கொடுத்துள்ளார். அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலகட்டப் போராட்டங்களைக் கடந்தது அவரது வாழ்க்கை . அந்த போராட்டத்தில் வாயிலாக தமிழக மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்.


இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டேன். அடிக்கடி தமிழகம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினேன். ஏன் என்று கேட்டபோது, நான் என்னை அறியாமல் நான் தமிழன் என கூறினேன். ஏனென்றால் இந்த மண்ணில் எனது ரத்தம் கலந்துள்ளது. எனது ரத்தம் தமிழக மண்ணில் கலந்துள்ளதால் தமிழன் என்றேன். தமிழகத்திற்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்களிடம் அன்பாக பேசினால் எதையும் பெறலாம். நான் தமிழன் என்று அழைத்துக்கொள்ளும் உரிமை எனக்கு உள்ளதாகக் கருதுகிறேன். நான் இங்கு வரும்போதெல்லாம், பணிவான குணத்தை கற்றுக்கொண்டேன். தமிழக வரலாற்றுக்கு , பாரம்பரியத்திற்கு தலை வணங்குபவனாக ஒவ்வொரு முறையும் தமிழகம் வருகிறேன்.

தமிழகத்தின் வரலாற்றை தெரிந்துகொள்ளாமல் நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியாது. தமிழர்களிடம் அன்புடன், பரிவுடன் பேசினால் அவர்கள் எதையும் தருவார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எத்தனை வயது இருக்கும் என நினைக்கிறீர்கள் என்று எனது தாயாரிடம் கேட்டேன்; ஒரு 58 அல்லது 60 இருக்கும் என அவர் சொன்னார்; 69 வயது என்று சொன்னேன், அவர் கூகுளில் சர்ச் செய்து பார்த்துவிட்டுதான் ஆம் என ஒப்புக்கொண்டார். மு.க.ஸ்டாலின் இளமை ரகசியம் குறித்து அடுத்த புத்தகத்தில் வெளியிட வேண்டும். நான் முன்பு பார்த்ததைவிட இன்னும் இளமையாக தெரிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; ஆகவே, நாளை அவர் பிறந்தநாள் கேக்கை சரியான அளவே சாப்பிட வேண்டும்.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். எனில், மாநிலங்களிலிருந்துதான் இந்தியா உருவாகிறது. 3,000 ஆண்டுகளாக தமிழ் மக்களின் மீது யாரும் எதனையும் திணிக்க முடிந்ததில்லை; தமிழ் மக்களிடம் அன்போடும் அக்கறையோடும் பேசினால், அவர்களிடம் இருந்து எதையும் பெறலாம். பிரதமர் பொருள்புரியாமல் தமிழகத்தை பற்றி பேசுகிறார்.


தமிழ் மக்களின் குரலை புரிந்து கொள்ளாமல் நான் உங்களுக்காக பேசுகிறேன் என எப்படி சொல்வீர்கள்? நீட் விலக்கு வேண்டுமென தமிழகம் தொடர்ந்து கூறுவதை கேட்க மறுக்கிறீர்கள் என்றால் அவர்கள் மீது என்ன மதிப்பு வைத்துள்ளீர்கள்?"

வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவிற்கு வலிமை கொடுக்கிறது. இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று யாரோ தீர்மானிக்கிறார்கள். அதைச் செய்ய நீங்கள் யார்?

ஜிஎஸ்டி நியாயமற்றது என்று தமிழகம் வெளிப்படையாக எதிர்த்தது. ஆட்சி செய்துகொண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டையும் தெரிந்துகொள்ளவில்லை. தமிழர்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் எனக்கு தமிழக மக்களுடன் அனுபவம் உள்ளது. அவர்களுடன் அன்போடு , மரியாதையோடு பழகினால் எதையும் பெறலாம். ஆனால் எதையும் திணிக்க முடியாது என்று ராகுல் காந்தி பேசினார்.

Updated On: 28 Feb 2022 3:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?