/* */

வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் விவசாயிகள் உறுதிமொழி

வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் விவசாயிகள் உறுதிமொழி
X

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என நம்மாழ்வார் நினைவு தினத்தில் விவசாயிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் ரயில் முன்பு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்பு இதில் கலந்து கொண்ட விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவினால் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட கூடிய நிலை ஏற்படும்.

மேலும் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் போராடி வெற்றி பெற்ற பிடி கத்தரிக்காய் உள்ளிட்ட அனைத்து விதைகளும் தடை செய்த நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்திற்கு வந்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் பறிபோகும் நிலை என்பது ஏற்படும். இதனால் மண் மலடாகி விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலமாக மாறிவிடும். எனவே நம்மாழ்வாரின் நினைவு தினத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Updated On: 30 Dec 2020 7:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?