/* */

10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை நாளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
X

பைல் படம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் நடப்பாண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது

அதன்படி 12ஆம் வகுப்புக்கு மே 5-ஆம் தேதி- 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 11ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும், 10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.

அத்துடன் 10-ஆம் வகுப்புக்கு ஜூன் 17ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். 12ஆம் வகுப்புக்கு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மாணவர்கள் தங்களது பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது பற்றிய தகவல் விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஏற்கனவே 10 ஆம் வகுப்பு தனித் தேர்வர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை நேற்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Updated On: 21 April 2022 2:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  2. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  4. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  5. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  6. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  8. ஈரோடு
    அந்தியூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு