/* */

அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு

அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு
X

ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்சுடன் மனுதாரர் உள்ளார்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி பக்கமுள்ள யாகப்பபுரம் மல்லிகை பட்டியைச் சேர்ந்தவர் பெரியதாய் என்கிற அழகி (வயது 40). இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் ஒன்று பெரியதாய் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

இதையொட்டி இறந்த பெரியதாய் என்கிற அழகியின் மகன் சுப்பிரமணியன், மகள் பெரியக்கா ஆகியோர் தங்களுக்கு இழப்பீடு கேட்டு திருச்சி மூன்றாவது கூடுதல் சப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் கடந்த 2005ஆம் ஆண்டு தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது அரசு விரைவு போக்குவரத்து கழகம் மனுதாரர்களுக்கு 3 லட்சத்து 96 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த தொகையை அரசு விரைவு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை.

இதனைத்தொடர்ந்து மனுதாரர்கள் மீண்டும் அதே கோர்ட்டில் இ.பி. என்று சொல்லப்படும் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சோமசுந்தரம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மனுதாரர்களுக்கு ரூ. 9 லட்சத்து 94 ஆயிரத்து 940 ரூபாயை உரிய வட்டி தொகையுடன் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பின் படி உரிய காலகட்டத்திற்குள் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மனுதாரர்களுக்கு இழப்பீடு தொகையை வழங்கவில்லை.

இதன் காரணமாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்றை ஜப்தி செய்வதற்கு நீதிபதி சோமசுந்தரம் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில் இன்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் ஒன்றை மனுதாரரின் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கோர்ட் அமீனா மற்றும் ஊழியர்கள் சென்று ஜப்தி செய்து திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

இந்த சம்பவம் மத்திய பஸ் நிலையம் பகுதியிலும் கோர்ட்டு வளாகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 8 April 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...