/* */

அக்டோபர் 1 முதல் ரயில்களின் கால அட்டவணையில் மாற்றங்கள்

அக்டோபர் - 1ம் தேதி முதல் சில முக்கிய சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்து தென்னக ரயில்வே அறிவிப்பு

HIGHLIGHTS

அக்டோபர் 1 முதல் ரயில்களின் கால அட்டவணையில் மாற்றங்கள்
X

பைல் படம்

அக்டோபர் - 1ம் தேதி முதல் சில முக்கிய சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்து தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,

1.வண்டி எண் 06236 மைசூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே காலை 06.35, 06.55, 07.10, 07.50, 08.05, 08.15, 08.40, 09.05, 09.25, 10.00 மணிக்கு பதிலாக காலை 06.25, 06.44, 07.00, 07.40, 07.53, 08.05, 08.25, 08.48, 09.15, 09.50 மணிக்கு புறப்படும்

2. வண்டி எண் 07236 நாகர்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயில் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 09.05, 10.05, 10.25, 10.50, அதிகாலை 01.10 மணிக்கு பதிலாக 09.00, 09.55, 10.17, 10.40, அதிகாலை 01.00 மணிக்கு புறப்படும்

3. வண்டி எண் 07235 பெங்களூரு - நாகர்கோவில் சிறப்பு ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 02.00, 03.00, 03.40, 04.05, 04.25, காலை 06.15 மணிக்கு பதிலாக அதிகாலை 01.55, 02.55, 03.35, 03.58, 04.20, 05.50 மணிக்கு புறப்படும்

4. வண்டி எண் 06861 புதுச்சேரி - கன்னியாகுமரி சிறப்பு ரயில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களிலிருந்து இரவு 09.25, 10.15, 10.40, 11.05 மணிக்கு பதிலாக இரவு 09.20, 10.05, 10.28, 10.50 மணிக்கு புறப்படும்

5. வண்டி எண் 06072 திருநெல்வேலி - தாதர் சிறப்பு ரயில் கோவில்பட்டி, திண்டுக்கல் ரயில் நிலையங்களிலிருந்து முறையே காலை 08.12, 11.05 மணிக்கு பதிலாக காலை 08.10, 11.00 மணிக்கு புறப்படும்

6. வண்டி எண் 06071 தாதர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே காலை 06.05, 06.50 மணிக்கு பதிலாக காலை 06.00, 06.45 மணிக்கு புறப்படும்.

7. வண்டி எண் 02627 திருச்சி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து நண்பகல் 12.15 மணிக்கு பதிலாக நண்பகல் 12.10 மணிக்கு புறப்படும்

8. வண்டி எண் 02668 நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர சிறப்பு ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து இரவு 11.30, நள்ளிரவு 12.30, அதிகாலை 01.15, 02.45 மணிக்கு பதிலாக இரவு 11.25, நள்ளிரவு 12.20, அதிகாலை 01.10, 02.30 மணிக்கு புறப்படும்

9. வண்டி எண் 06734 ஓகா - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து மாலை 03.55 மணிக்கு பதிலாக மாலை 03.50 மணிக்கு புறப்படும்

10. வண்டி எண் 06780 ராமேஸ்வரம் - திருப்பதி சிறப்பு ரயில் மானாமதுரையில் இருந்து மாலை 05.00 மணிக்கு பதிலாக மாலை 04.57 மணிக்கு புறப்படும் மறுமார்க்கத்தில் வண்டி எண் 06779 திருப்பதி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து அதிகாலை 01.45 மணிக்கு பதிலாக அதிகாலை 01.40 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு அதிகாலை 05.10 மணிக்கு பதிலாக அதிகாலை 04.55 மணிக்கு சென்று சேரும்

11. வண்டி எண் 02652 பாலக்காடு - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 07.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 07.40 மணிக்கு புறப்படும் மறுமார்க்கத்தில் வண்டி எண் 02651 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - பாலக்காடு சிறப்பு ரயில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து முறையே காலை 06.15, 06.45, 07.25, 08.05 மணிக்கு பதிலாக காலை 06.05, 06.35, 07.15, 07.55 மணிக்கு புறப்படும்

12. வண்டி எண் 06792 பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி சிறப்பு ரயில் கிளிகொல்லூர், கொட்டாரக்கரா, புனலூர் ஆகிய ரயில் நிலைகளிலிருந்து முறையே இரவு 11.45, நள்ளிரவு 12.08, 12.45 மணிக்கு பதிலாக இரவு11.40, 11.58, நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும்

13. வண்டி எண் 06344 மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா சிறப்பு ரயில் பழனி, உடுமலைப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து மாலை 06.30, இரவு 07.05 மணிக்கு பதிலாகமாலை 06.20, இரவு 07.00 மணிக்கு புறப்படும்

14. வண்டி எண் 06867 விழுப்புரம் - மதுரை சிறப்பு ரயில் கொளத்தூர், மணப்பாறை, வையம்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 08.45, 09.00, 09.15 மணிக்கு பதிலாக இரவு 08.37, 08.52, 09.05 மணிக்கு புறப்படும்

15. வண்டி எண் 06157 சென்னை எழும்பூர் - மதுரை சிறப்பு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து காலை 06.45 மணிக்கு பதிலாக காலை 06.40 மணிக்கு புறப்படும்

என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On: 28 Sep 2021 11:12 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  3. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  4. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  5. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  6. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  7. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  8. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  9. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  10. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...