/* */

செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே அறிவிப்பு!

செகந்திராபாத் - ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு விரைவு ரயில்களின் சேவையை மேலும் இரண்டு மாத காலத்திற்கு நீட்டிப்பதாக தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது

HIGHLIGHTS

செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே அறிவிப்பு!
X

கோப்புப்படம்

செகந்திராபாத் - ராமநாதபுரம் இடைய இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில்களின் சேவையை, மேலும் இரண்டு மாத காலத்திற்கு நீட்டிப்பதாக தென் மத்திய ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது‌.

அதன்படி செகந்திராபாத் - இராமநாதபுரம் சிறப்பு ரயில் (07695) புதன்கிழமைகளில் மே 1, 8, 15, 22, 29, ஜுன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் செகந்திராபாத்தில் இருந்து இரவு 09.10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 11.45 மணிக்கு இராமநாதபுரம் வந்து சேரும்.

மறு மார்க்கமாக ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் (07696) மே 03, 10, 17, 24, 31, ஜுன் 07, 14, 21, 28 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 09.50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் வந்து சேரும்.

இந்த ரயில்கள் நலகொண்டா, மிரியால் குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், காவாலி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தென்மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

Updated On: 1 May 2024 4:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு