/* */

சென்னை - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில்: பிரதமர் துவக்கி வைக்கிறார்

சென்னை திருப்பதி இடையே வந்தே பாரத் ரயிலை ஜூலை 7ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

HIGHLIGHTS

சென்னை - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில்: பிரதமர் துவக்கி வைக்கிறார்
X

கோப்புப்படம் 

அதிவேக ரயில் பயண வசதியை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய அரசு நாடு முழுவதும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் மிக வேகமாகச் செல்லும் ரயில்களாக உள்ளன. இவை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கும் திறன் கொண்டவையாக உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு, கோயம்புத்தூர் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி தொடங்கி வைத்தார். இந்த ரயில் சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியாக கோயம்புத்தூர் வரை இரு மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையேயும், சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையேயும் தலா ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் வரும் 7-ம் தேதி காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே போல் சென்னையில் இருந்து நெல்லைக்கும் விரைவில் படுக்கை வசதியுடன் கூடிய புதிய வந்தே பாரத் ரயில் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே அதிகபட்சமாக மணிக்கு130 கி.மீ. வேகத்தில் செல்ல ரயில் பாதைகள் தயாராக உள்ளன.

Updated On: 3 July 2023 5:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?