Begin typing your search above and press return to search.
வருகிற 26- ம் தேதி மு.க. ஸ்டாலின் திருச்சி நிகழ்ச்சிகள் திடீர் ரத்து
வருகிற 26- ம் தேதி மு.க. ஸ்டாலின் திருச்சியில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் திடீர் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வருகிற 26-ம்தேதி திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட கதவணையை திறந்து வைக்கும் அவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரி விழாவில் பங்கேற்பார் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக திடீரென இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலக்குறைவானது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் வெளியூர் பயணத்தால் மீண்டும் பிரச்சினை ஏற்படலாம் எனக் கருதி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.