/* */

'குட் டச்,' 'பேட் டச் 'கருத்து கந்தசாமிகளுக்கு சுப்ரீம் கோர்ட் வைத்த குட்டு: 'டோன்ட் டச்'

இனி பெண்களை எப்போதும் 'டோண்ட் டச்' பொருள்படும் வகையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு மனோதத்துவ நிபுணர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

குட் டச், பேட் டச் கருத்து கந்தசாமிகளுக்கு  சுப்ரீம் கோர்ட் வைத்த குட்டு: டோன்ட் டச்
X

என்னைத் தொடாதே (மாதிரி படம்)

'குட் டச்' 'பேட் டச்' என்று விதண்டவாதம் செய்து கொண்டிருந்த கருத்து கந்தசாமிகளுக்கு சுப்ரீம் கோர்ட் 'டோன்ட் டச்' என்று வைத்த குட்டு மனோதத்துவ மருத்துவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

ஒவ்வொரு முறையும் மாணவிகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் போதெல்லாம், கருத்து கந்தசாமிகள் பலர் வெளியுலகிற்கு வந்து அறிவுரை சொல்லத்தொடங்கி விடுவார்கள். அதாவது பெண் குழந்தைகளை பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' பற்றிய வித்தியாசங்களை சொல்லித்தர வேண்டுமாம். இதன் மூலம் இவர்கள் மறைமுகமாக சொல்ல வரும் விஷயம் நல்ல முறையில் பெண் குழந்தைகளை தொட்டுக்கொள்ளலாம் என்பது தான். அதாவது 'குட் டச்' ஓகே என்றால் இது தானே அர்த்தம்.

என் குழந்தையை நல்ல முறையில் தொட்டுக்கொள்ள எந்த தடையுமில்லை என ஒரு தாய் அனுமதிக்கலாமாம். கருந்து கந்தசாமிகளின் இந்த ஆகச்சிறந்த அறிவுரையை மனோவியல் நிபுணர்கள் முட்டாள்தனம் என வர்ணித்தனர். அவர்கள் கூறுகையில், 'ஒரு பெண் குழந்தையை தாயை தவிர (தந்தை கூட சில காலம் துாக்கி கொஞ்சலாம் அதன் பின்னர் அவர்களுக்கும் கூட தடை தான்) வேறு யாரும் தொடுவதற்கு அனுமதி கிடையாது. இது தான் இந்தியர்களின் பண்பாட்டின் அடிப்படை கலாச்சாரம்.

உச்ச நீதிமன்றம்

அறிவுரை சொல்கிறேன் எனக்கூறி 'குட் டச்' என பெயரிட்டு நம் குழந்தையை தொடுவதற்கு ஏதோ ஒரு அன்னியனுக்கு நாம் ஏன் அனுமதி வழங்க வேண்டும்? குழந்தையை தொட்டு தான் அன்பை வெளிப்படுத்த வேண்டுமானால் அந்த அன்பே தேவையில்லை என்பது தான் மனோதத்துவ நிபுணர்களின் வாதமாக இருந்து வந்தது. ஆனால் கருத்து கந்தசாமிகளின் பரப்புரைக்கு முன்னர் இந்த மனோதத்துவ நிபுணர்களின் வாதம் எடுபடவில்லை.

இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கு ஒன்றில், மும்பை உயர்நீதிமன்றம் கொடுத்த ஒரு தீர்ப்பை (துணிமேல் தொட்டால் தவறில்லை, (அதாவது 'குட் டச்' தவறில்லை என்ற ரீதியில் சொல்லப்பட்ட தீர்ப்பை) ரத்து செய்து, பெண்களை தொடுவதே பாலியல் குற்றம். அவர்கள் மீது போக்சோ வழக்கு போடலாம். எந்த பெண்களையும் இனி 'டோண்ட் டச்' என சுப்ரீம் கோர்ட் தெளிவுபட அறிவுறுத்தி விட்டது.

இந்த தீர்ப்பை மனோதத்துவ நிபுணர்கள், டாக்டர்கள் வரவேற்றுள்ளனர். வன்மம் நிறைந்த மனதுடன் ஒருவன் பெண்ணை எங்கு தொட்டாலும் தவறு என்பதே. இதில் தொடுதலோ, தொடும் இடமோ முக்கியமில்லை. தொடும் நோக்கம் தான் முக்கியம். இது போன்ற வன்மம் நிறைந்த நபர்களை போக்சோவில் தண்டிப்பதில் தவறில்லை என்பதே சுப்ரீம்கோர்ட்டின் தெளிவான தீர்ப்பு. இது மிகவும் வரவேற்கத்தக்க தீர்ப்பு. இனிமேல் நிச்சயம் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என மனோதத்துவ நிபுணர்களும், டாக்டர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். புரிந்து கொள்ளுங்கள் கருத்து கந்தசாமிகளே இனிமேல் 'குட் டச்' 'பேட் டச்' எல்லாம் கிடையாது. 'டோன்ட் டச்' மட்டும் தான்.

பெண் பிள்ளைகளை பெற்ற தாய்மார்கள் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். பள்ளிக்கூடம் தொடங்கி சாலையில் நடந்து செல்லும் பெண்களுக்கு கூட பாதுகாப்பில்லாத இந்த காலகட்டத்தில் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Updated On: 21 Nov 2021 7:52 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  2. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  3. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  4. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  5. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?