/* */

தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ சோதனை

NIA Raids Today -சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ சோதனை
X

சென்னையில் உள்ள ஒரு வீட்டில் சோதனையிட வந்த என்ஐஏ அதிகாரிகள்.

NIA Raids Today -சென்னையில் மண்ணடி, ஜமாலியா, புதுப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபினுடன் தொடர்புடையவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் என சந்தேகப்படுபவர்கள் வீடுகளில் இந்த சோதனை நடந்து வருகிறது. திருப்பூரில், ஜமேஷா முபினின் தங்கை கணவர் வீடு, மயிலாடுதுறையில் ஒருவர் வீடு என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி, கார் வெடிப்பு சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின்(25) என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். வெடி பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட 75 கிலோ வெடி பொருட்கள், அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம், கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், போலீசார் துரிதமாக செயல்பட்டு, இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரை, 24 மணி நேரத்துக்குள் கைது செய்தனர். அதன்பின், அப்சர்கான் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த பயங்கர சம்பவத்தின் பின்னணியில், தீவிரவாத இயக்க தொடர்புகள் இருப்பது விசாரணையில் உறுதியானதை தொடர்ந்து, தமிழக அரசு என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்தது.

இதையடுத்து, இந்த வழக்கு தமிழக போலீஸாரிடம் இருந்து, தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.

சென்னையில் உள்ள என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான்(26) ஆகிய 6 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் ('உபா') கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும், அவர்களது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் முக்கிய ஆவணங்கள், பென்டிரைவ், பிரச்சார வீடியோக்கள் உட்பட பல ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கார் வெடிப்பில் இறந்த முபின், தனது கூட்டாளிகளுடன் இணைந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.

சம்பந்தப்பட்ட 6 பேரையும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் முன்பு என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை ஆஜர்படுத்தினர். 6 பேரையும் வரும் 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று (நவ.10) கோவை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை 4:20 மணி முதல், இந்த சோதனை நடந்து வருகிறது. இதில், இன்னும் பல முக்கிய தகவல்கள், ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 10 Nov 2022 7:27 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்