/* */

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு உரிமம் பெற சிறப்பு முகாம்…ஆட்சியர் தொடங்கி வைத்தார்…

Thoothukudi Collector -தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு உரிமம் பெற சிறப்பு முகாம்…ஆட்சியர் தொடங்கி வைத்தார்…
X

முகாமில் உணவு பாதுகாப்பு உரிமம் வழங்கிய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.

Thoothukudi Collector -தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் வசம் உள்ள உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், சேமிப்பு கிட்டங்கிகள், சில்லறை விற்பனையாளர்கள், ஹோட்டல்கள், உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்களை விற்கும் மருந்தகங்கள், தெருவோர வணிகர்கள், விழாக்கால விற்பனையாளர்கள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் போக்குவரத்தாளர்கள், உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகிய அனைத்து வகை உணவு வணிகர்களும் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெறுவது அவசியமாகும். இந்த சான்றிதழ் உணவு பாதுகாப்புத் துறையால் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட வணிகர்கள் பயன்பெறும் வகையில், தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன், அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத் தலைவர் தமிழரசு, முன்னாள் தலைவர் ஜோ பிரகாஷ், தூத்துக்குடி மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்திமுருகன், காளிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியதாவது:

உணவு வணிகர் என்பவர் உணவுப் பொருட்களை தயாரிப்பவர்கள் மற்றும் அதனை நுகர்வோரிடத்தில் கொண்டு சென்று சேர்க்கக்கூடிய விற்பனையாளர்கள் ஆவர். இதில் அன்னதானம் போன்ற இலவச சேவைகளும் அடங்கும். ஆனால் விவசாயிகளும், மீனவர்களும் உணவு வணிகர் என்ற வரையறையில் வரமாட்டார்கள்.

அதேவேளையில் விவசாயிகளும், மீனவர்களும் முறையே தங்களது உற்பத்தி மற்றும் மீன் பொருட்களை நேரடியாக நுகர்வோரிடத்தில் விற்பனை செய்யும்பட்சத்தில் அவர்கள் உணவு வணிகர்களாகவே கருதப்படுகின்றனர். உயிர் வாழ அடிப்படைத் தேவையான உணவினை வழங்கும் வணிகர் அந்த உணவினை பாதுகாப்பாக தயாரிக்க வேண்டும்.

மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இல்லாமல் உணவுத் தொழில் புரிவது என்பது தண்டனைக்குரியதாகும். உணவு பாதுகாப்பு உரிமம் பெற வணிகர்கள் இருப்பிடத்திலிருந்தோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட இணைய மையத்திலிருந்தோ https://foscos.fssai.gov.in என்ற இணையதளம் மூலமாக கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். ஒரே முறையில் ஐந்து ஆண்டுகள் வரை செல்லத்தக்க வகையிலும் உரிய கட்டணம் செலுத்தி உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.

FSSAI என்பது 200 மக்கள் தொகைக்கு ஒரு உணவு வணிகர் அதாவது ஒரு லட்சம் மக்களுக்கு 500 உணவு வணிகர்கள் இருப்பார்கள் என்று கணித்திருந்தாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த விகிதமானது ஒரு லட்சம் மக்களுக்கு 1346 உணவு வணிகர்கள் என்ற அளவில் உள்ளது. தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களைவிட இது மிக அதிகம்.

திருவள்ளுர், காஞ்சிபுரம் போன்ற பெருநகரங்களை உள்ளடக்கிய மாவட்டங்களில் இந்த விகிதம் மூன்று இலக்க அளவிலேயே உள்ளன. அதிக உணவு வணிகர்களைக் கொண்டுள்ளதால் அந்த வணிகர்கள் சுய இணக்கமாக உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்று நுகர்வோர்களுக்கு பாதுகாப்பான உணவைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தவே சிறப்பு முகாம் நடைபெற்றது.

வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற தவறும்பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை தவிர்க்க இயலாது. தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஓவ்வொரு பகுதியும் அங்குள்ள வணிகர்களால்தான் வளம்பெறும்.

சங்க காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொற்கை பகுதியில்தான் முதற்சங்கம் தோன்றியது. பாண்டியர்கள் காலத்திலேயே அவை தோன்றிவிட்டது. சோழர்கள் கடல் கடந்து மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை கைப்பற்றியுள்ளனர்.

வணிகர்கள் தங்களது பொருட்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று பதிவு செய்தால் ஏற்றுமதி செய்ய முடியும். வாடிக்கையாளர்களும் நம்பிக்கையுடன் வாங்குவார்கள். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழ்நாட்டிலேயே முதல் மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை 100 சதவீதம் உணவு வணிகர்கள் உரிமத்துடன் செயல்படும் மாவட்டமாக மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Updated On: 8 Nov 2022 10:52 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  3. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  5. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  6. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  7. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  8. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  10. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...