/* */

அடுத்த சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன்

கேள்வி எழுப்பிய செய்தியாளரின் கேமராவை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தட்டிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

அடுத்த சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன்
X

அமைச்சர் ராஜகண்ணப்பன்

தமிழக போக்குவரத்து துறையில் சென்னை துணை ஆணையராக இருந்த நடராஜன் அலுவலகத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடந்தது. அந்த சோதனையில் 35 லட்சம் ரூபாய் ரொக்கம், வரவு செலவு கணக்கு டைரி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் எழிலகம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், துணை ஆணையர் நடராஜன் மற்றும் பணம் சரிபார்க்கும் அவரது உதவியாளர் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது.

போக்குவரத்து துறை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு தலா 5 லட்சம் ரூபாய் வரை நடராஜன் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு அந்த சோதனையை நடத்தியது. தொடர்ந்து அவர் பணியிடைநீக்கம் செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகின. ஆனால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் சென்னையில் போக்குவரத்து துறை துணை ஆணையராக இருந்து வரும் நடராஜன் திருநெல்வேலிக்கு மாற்றி போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் போக்குவரத்துத் துறை சென்னை துணை ஆணையராக இருந்த நடராஜனுக்கு எதிராக லஞ்ச புகாரில் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டபோது, செய்தியாளரின் கேமராவை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தட்டிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 31 March 2022 3:31 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!