/* */

அமைச்சர் விழாவில் அணி வகுத்த வாகனங்கள்: நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்

குத்தாலத்தில்,சாலையின் இருபுறமும் திமுகவினர் வாகனத்தை நிறுத்தியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் சிக்கித்தவித்தது.

HIGHLIGHTS

அமைச்சர் விழாவில் அணி வகுத்த வாகனங்கள்:  நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்
X

குத்தாலத்தில் அமைச்சர்கள் வருகையால், இருபுறமும் திமுகவினர் வாகனத்தை நிறுத்தினர். இதனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்த ஆம்புலன்ஸ்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் மற்றும் அரசு தலைமை கொறடா கோவி செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த திமுகவை சேர்ந்தவர்கள், மயிலாடுதுறை - கும்பகோணம் பிரதான சாலையில் இருபுறங்களிலும் தங்கள் வாகனத்தை நிறுத்தி வைத்தனர். இதனால், சாலை குறுகலானது. அப்போது, மயிலாடுதுறையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நோயாளி ஒருவர், உயிருக்கு போராடிய நிலையில், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்தார். அவரது வாகனமும் நெரிசலில் சிக்கிய திணறி, ஊர்ந்து சென்றது.

அதேபோல், சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வருங்காலத்தில் இதுபோன்ற சிக்கல் எழாமல் அரசியல் கட்சியினர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 26 Oct 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு