/* */

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய மே 6 திங்கள்கிழமை ராசிபலன்கள்

HIGHLIGHTS

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

மேஷம்

இன்று காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

ரிஷபம்

இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கைகொடுக்கும். பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும்.

மிதுனம்

இன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம் உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும்.

கடகம்

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

கன்னி

இன்று மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

துலாம்

இன்று இடையூறுகள் விலகும். தர்மகுணமும், இரக்க சிந்தனையும் மேலோங்கும். எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள்.

விருச்சிகம்

இன்று உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும்.

தனுசு

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும்.

மகரம்

இன்று கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும்.

கும்பம்

இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும். ஆடை ஆபரணத்தையும் அலங்காரத்தையும் விரும்புவீர்கள்.

மீனம்

இன்று காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்

Updated On: 6 May 2024 2:37 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?