/* */

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளரை வழிமறித்து விவசாயிகள் போராட்டம்!

மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளர் சுதா கும்பகோணம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அப்பகுதி கரும்பு விவசாயிகள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

HIGHLIGHTS

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளரை வழிமறித்து விவசாயிகள் போராட்டம்!
X

காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவின் பிரச்சார வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா, முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் தலைமையில், கும்பகோணம் அருகே கல்விக்குடி கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

இந்த நிலையில், திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.400 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், இன்றுடன் 501வது நாளாக கல்விக்குடி கிராமத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அப்போது அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் வேட்பாளரின் பிரச்சார வாகனத்தை வழிமறித்து விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, வேட்பாளர் சுதா வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வந்து விவசாயிகளின் பிரச்சனை குறித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்றால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கபிஸ்தலம் காவல்துறையினர், இரு தரப்பினரையும் சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் கூறுகையில், “விவசாயிகள் 501வது நாளாக போராடி வருகிறோம். இதுவரை திமுக அரசு இதனை கண்டுகொள்ளவில்லை. அரசே அந்த சர்க்கரை ஆலையை மறைமுகமாக நடத்துகின்றனர். அதனால், அவர்கள் விவசாயிகளை தொடர்ந்து புறக்கணிக்கின்றனர். எனவே, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கரும்பு விவசாயிகளும் ஓட்டு போடாமல் தேர்தலை புறக்கணிக்கிறோம். விவசாயிகளில் ஜனநாயகம் மறுக்கப்பட்டுள்ளது.

இன்று மயிலாடுதுறை திமுக கூட்டணி நாடாளுமன்ற வேட்பாளர் சுதா பிரச்சாரம் செய்தார். அவரை மறித்து நாங்கள் எங்கள் கோரிக்கையை முன்வைத்தோம். அவர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால், எங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை.

முன்னதாக திமுக மாநிலங்களவை உறுப்பினரும், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான சு கல்யாணசுந்தரம், கரும்பு விவசாயிகள் முற்றுகையிடுவார்கள் என முன்னதாக தெரிந்து கொண்டு, கல்விக்குடி கிராம பரப்புரைக்கு வராமல் சென்றுவிட்டார். எனவே, 2024 நாடாளுமன்ற தேர்தலில் இப்பகுதி கரும்பு விவசாயிகள் ஒட்டு மொத்தமாக திமுக கூட்டணிக்கு எதிராக வாக்கு செலுத்த உள்ளோம்” என்று தெரிவித்தனர்.

Updated On: 13 April 2024 11:03 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...