/* */

2 கைகள் இல்லாத நிலையிலும் நம்பிக்கையுடன் பிளஸ்- 2 தேர்வு எழுதிய மாணவி

மயிலாடுதுறையில் 2 கைகளும் இல்லாத நிலையிலும் நம்பிக்கையுடன் மாணவி பிளஸ்- 2 தேர்வு எழுதி உள்ளார்.

HIGHLIGHTS

2 கைகள் இல்லாத நிலையிலும் நம்பிக்கையுடன் பிளஸ்- 2 தேர்வு எழுதிய மாணவி
X

2 கைகளும் இல்லாத நிலையில் மயிலாடுதுறையில் ஆசிரியை உதவியுடன்  மாணவி பிளஸ்2 தேர்வு எழுதினார்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 89 பள்ளிகளில் கல்வி பயிலும் 5042 மாணவர்களும் 5353 மாணவிகள், 52 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 395 மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதுகின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு கைகளும் இல்லாத லெட்சுமி என்ற மாணவி ஆசிரியை உதவியுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினார். பிறந்தபோது இரண்டு கைகளும் இல்லாத பெண் குழந்தை என்பதால் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு மயிலாடுதுறை ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில் இவர், இரண்டு வயது குழந்தையாய் இருந்தபோது இருந்தே வளர்ந்து வருகிறார். தற்போது தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவியை பலரும் பாராட்டினர்.

Updated On: 5 May 2022 10:57 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...