/* */

சீர்காழியில் இருதயம், குடல் இரைப்பை நோய் சிறப்பு மருத்துவ முகாம்

சீர்காழியில் இருதயம், குடல் இரைப்பை நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சீர்காழியில் இருதயம், குடல் இரைப்பை நோய் சிறப்பு மருத்துவ முகாம்
X

சீர்காழியில் இரைப்பை, குடல் நோய்களுக்கான மருத்துவமுகாம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ச.மு.இ.மேல்நிலைப்பள்ளியில் சீர்காழி ரோட்டரி சங்கம் ,சென்னை பில்ராத் மருத்துவமனை, பரஞ்சோதி ஜூவல்லரி மற்றும் நகர்மன்ற உறுப்பினர் நித்யா தேவி பாலமுருகன் ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கான இருதயம், குடல் இரைப்பை ,புற்றுநோய் மற்றும் குழந்தைகளுக்கான இருதய நோய் ஆகிய சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர். மருத்துவ முகாமில் பில்ராத் மருத்துவமனை இருதயம் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு ஈ.சி.ஜி, எக்கோ, பரிசோதனைகள் மற்றும் வயிறு,இருதய பிரச்சனைகளுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

பரிசோதனையில் இருதய அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்திட பரிந்துரை செய்தனர். சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர். மருத்துவ முகாமை சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். சீர்காழி நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி ,ரோட்டரி தலைவர் ராஜேந்திரன் ,செயலாளர் கணேஷ் மற்றும் நகரமன்ற உறுப்பினர் நித்யா தேவி பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இருதய அறுவை சிகிச்சை மற்றும் இருதய நோய் மருத்துவ நிபுணர்கள் பொதுமக்களுக்கு இருதய நோய் வராமல் இருக்க எவ்வகையான வாழ்வியல் முறையை பின்பற்றுவது என்பது குறித்து கருத்துரை வழங்கினர்.

Updated On: 10 April 2022 3:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’