/* */

குத்தாலம் அருகே காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

குத்தாலம் அருகே முதியவர் தற்கொலைக்கு காரணமான காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

குத்தாலம் அருகே காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி  போராட்டம்
X

போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள தேரழுந்தூர் சிவன்கோவில் வடக்குவீதியை சோந்தவர் அர்ஜுனன்(60). இவருக்கு ரத்தப் புற்றுநோய் உள்ளது, மாதத்திற்கு இருமுறை அடையாறு மருத்துவமனைக்குச் சென்று வருபவர். ஆட்டோ ஓட்டுநர் ஜெயசீலன் என்ற இளைய மகன் மருத்துவசிகிச்சைக்கு சென்னைக்கு அழைத்துச் செல்வது வாடிக்கை. இவரது மூத்த மகன் ஜெயவசந்தனுக்கும் அதே பகுதியில் ஜவுளிக்கடை வைத்துள்ள மணிகண்டன் என்பவருக்கும் அடிதடிதகராறு ஏற்பட்டுள்ளது. குத்தாலம் போலீசார் இரண்டு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக நாம் தமிழர்கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் மணிகண்டன் கடையில் கள்ளநோட்டு வைத்துவிட்டு சென்றதாக புகாரின் பேரில் போலீசார் ஜெயசீலன்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் ஜெயசீலனை பிடிப்பதற்காக சென்ற குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி, ஜெயசீலன் எங்கே என்று கேட்டு தந்தை அர்ஜுனனை தகாத வார்த்தையால் பேசி கையை பிடித்து இழுத்து அவமரியாதை செய்ததாகவும் இதனால் மனஉளச்சலில் இருந்த ஜெயசீலனின் தந்தை அர்ஜுனன் பூச்சிமருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நேற்று இரவு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஜெயசீலன் அவரது அண்ணன் ஜெயவசந்தன் உள்ளிட்டவர்கள் மீது தொடர்ந்து பொய்வழக்கு போடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் அதிகாலையில் அர்ஜுனன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடல் பிரேத பிரிசோதனை கிடங்கில் வைக்கப்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளிமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இறந்த அர்ஜுனன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி.க்கள் வசந்தராஜ், லாமேக் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் அர்ஜுனன் தற்கொலை செய்துகொண்டது குறித்தும், ஜெயசீலன், ஜெயவசந்தன் வழக்குகளை வேறு காவல் ஆய்வாளர் மூலம் நேர்மையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அர்ஜுனன் உடலை பெற்றுச்சென்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 11 May 2022 3:39 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...