/* */

சீர்காழியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் நகரும் புகைப்பட கண்காட்சி

சீர்காழியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் நகரும் புகைப்பட கண்காட்சியை மாணவர்கள் கண்டு களித்தனர்.

HIGHLIGHTS

சீர்காழியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் நகரும் புகைப்பட கண்காட்சி
X

சீர்காழியில் வ.உ.சி.யின் நகரும் புகைப்பட கண்காட்சியை பள்ளி மாணவிகள் கண்டு களித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.. உ. சிதம்பரனார் 150-வது பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் படி அவரது வாழ்கை , வரலாற்றை பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் அரசு பேருந்தில் நகரும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு சென்று வருகிறது.

அவ்வகையில் சீர்காழி சீர்காழி ச .மு .இ மேல்நிலைப் பள்ளி மைதானம் நகரும் புகைப்படக் கண்காட்சி வாகனம் வருகை புரிந்தது. சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, நகராட்சி பள்ளி, தனியார் பள்ளிகள் என 10 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் புகைப்பட கண்காட்சியை கண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் சுதந்திரம் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாற்று முறைகள் குறித்து ஆசிரியர்கள் விவரிக்க தெரிந்து கொண்டனர்.

கண்காட்சி வாகனத்தில் அமைக்கப்பட்ட இருந்த வ.உ.சி. உருவச்சிலையை மாணவ-மாணவிகள் வணங்கி உருவச் சிலையுடன் நின்று செல்பி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

Updated On: 19 April 2022 2:17 PM GMT

Related News