/* */

வைத்தீஸ்வரன் கோயில் அரசு பள்ளியில் கல்வித் துறை ஆணையர் திடீர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

வைத்தீஸ்வரன் கோயில் அரசு பள்ளியில் கல்வித் துறை ஆணையர் திடீர் ஆய்வு
X

வைத்தீஸ்வரன் கோயில் அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் திடீர் ஆய்வு நடத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்பள்ளி கல்வி துறை ஆணையர் கே.நந்தகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு வகுப்பில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர் வகுப்பின் கடைசி பெஞ்சில் அமர்ந்து ஆசிரியர்கள் பாடங்கள் எடுப்பதையும், அதை மாணவர்கள் எவ்வாறு கவனித்து புரிந்து கொள்கிறார்கள் என பார்வையிட்டார்.

தொடர்ந்து பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்களை பார்வையிட்டு அதனை இடித்து அகற்றிடவும், புதிய கட்டிடங்கள் கட்டுவது குறித்தும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதாவிடம் அறிவுறுத்தினார். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மது அருந்துவதும், காலி பாட்டில்களை உடைத்து விட்டு செல்வதால் மாணவர்கள் பாதிப்படைவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சைமணி கூறினார்.

ஆய்வு குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் கூறுகையில், பள்ளிகளில் மாணவர்களின் கல்வி தரம் குறித்தும், கல்வி தரம் உயர்த்துவதும் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரசுப்பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றுவது குறித்தும் மாற்றாக புதிய கட்டிடங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது, பள்ளிக் கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கவும் ஆய்வின்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ், சீர்காழி வட்டாட்சியர் சண்முகம், தலைமை ஆசிரியர் பிச்சைமணி உள்ளிட்ட ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Updated On: 15 Dec 2021 10:02 AM GMT

Related News