/* */

மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற இருவர் கைது: 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து, 2.5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற இருவர் கைது: 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்
X

கஞ்சா விற்றதாக கைதான இருவர். 

மயிலாடுதுறை நகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில், உதவி காவல் ஆய்வாளர் அறிவழகன், சுபஸ்ரீ மற்றும் போலீஸார் கிட்டப்பா உள்ளிட்டோர், பாலம் சுடுகாடு பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த மயிலாடுதுறை பெரிய சாலியத்தெரு அய்யர் என்பவரது மகன் ரஞ்சித் (26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், ரஞ்சித் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து ஒன்றேகால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகில் உள்ள சுடுகாடு பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை புனுகீஸ்வரன்கோயில் வடக்குவீதியைச் சேர்ந்த மோகன்தாஸ் மகன் மகேந்திரன் (21) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒன்றே கால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ.1.50 லட்சம் ஆகும்.

Updated On: 22 Jan 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...
  7. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  8. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  9. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  10. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்