/* */

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வயது முதிர்ச்சியால் ஆண் சிங்கம் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு
X

வண்டலூர் உயிரியல் பூங்காவில் தனிமையில் உலவும் சிங்கம் (கோப்பு படம்)

தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய உயிரியல் பூங்காவில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்று. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் பார்வையாளர்கள் வருகின்றனர்.கொரோனா காலக்கட்டத்தில், சுமார் 8 மாதங்கள் பூங்கா அடைக்கப்பட்டிருந்தது. இதனால் பல மிருகங்களும் பலியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. அக்கால கட்டத்தில், அரிய வகையான வெள்ளை புலி உயிரிழந்தது. அந்த புலி நரம்பியல் நோயான அட்டாக்ஸியா தாக்குதல் காரணமாக உயிரிழந்ததாகவும், இந்த நோய்க்கு எந்தவொரு சிகிச்சையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

2021 மே 26 ம் தேதிமுதல் கொரோனா 2 ம் அலை காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டது. பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்ட்து. ஆனாலும், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் நீலா என்ற 9 வயது பெண்சிங்கம் உயிரிழந்தது. இதனால் மற்ற சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ஆண் சிங்கம் ஒன்றும் கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தது.

இந்நிலையில் மீண்டும் தற்போது, வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் ஒன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு, கள்ளக்குறிச்சி சிறு பூங்காவில் இருந்து மணி என்னும் ஆண் சிங்கம் மீட்கப்பட்டது. இதையடுத்து இந்த சிங்கம் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு ஊழியர்களை கொண்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஆண் சிங்கம் மணி இன்று உயிரிழந்தது. இதையடுத்து, வண்டலூர் பூங்காவில் கடந்த 6 மாதங்களில் 5க்கும் மேற்பட்ட சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாகவும், தற்போது 10 சிங்கங்கள் மட்டுமே இருப்பதாகவும் பூங்கா நிர்வாகம் தரப்பில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 Jun 2022 3:22 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்