/* */

ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெற உயர்நீதிமன்றம் உத்தரவு

உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெற காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெற உயர்நீதிமன்றம்  உத்தரவு
X

சென்னை உயர்நீதிமன்றம் (கோப்பு படம்).

நீதிமன்றம் உத்தரவிட்டும் காவலர் குடியிருப்பை காலி செய்யாத மாணிக்கவேல் என்பவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வந்தது. அப்போது அரசு அளித்த விளக்கங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன், உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு, ஆர்டர்லி முறை குறித்து உடனடியாக கவனத்தில் கொள்ளுமாறு தமிழக டிஜிபிக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளதாகவும், இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் கூட்டங்களை நடத்தியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அப்படிப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, அவர்கள் (காவல்துறையினர்) எதற்காகப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்? வீட்டு வேலை செய்யவா!? ஓராண்டு பயிற்சி முடித்த காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம் எனவும், ஓய்வுபெற்ற காவல்துறையினர் நீதிபதிகள் வீடுகளில் உள்ள ஆர்டலிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், ஆர்டர்லிக்களை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Updated On: 21 Jun 2022 2:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  5. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  6. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  8. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  9. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!