/* */

பழைய ஓய்வூதியத் திட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரும் முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

பழைய ஓய்வூதியத் திட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

தமிழ்நாடு அரசு கடந்த 2003ஆ ம் ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வுதியத் திட்டத்தை அறிமுகம் செய்தது. 2003 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு அரசுத் துறைகளில் நியமிக்கபட்ட அனைத்து ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டமே பின்பற்றப்படும் என்றும் அரசு அறிவித்தது.

இதற்கிடையே, கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையின் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடரும்படி உத்தரவிடக்கோரி சிவசக்தி உள்ளிட்ட 25 காவலர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். 2002 ஆம் ஆண்டு 3,500 காவலர்கள் தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டதாகவும், அந்த தேர்வு நடைமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபட்ட தங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்றும் மனுதாரரகள் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ஆனால், 2002 ஆம் ஆண்டு தேர்வு நடைமுறைகள் தொடங்கி இருந்தாலும், 2003 நவம்பர் மாதம் தான் மனுதாரர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதால், புதிய ஓய்வூதியத் திட்டம் தான் அவர்களுக்கு பொருந்தும் என்றும், பழைய ஓய்வூதியத் திட்ட பலன்களை பெற அவர்களுக்கு தகுதி இல்லை என்றும் அரசு தரப்பில் வாதிடபட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை மூலம் பெண் காவலர்கள், ஓராண்டுக்கு உள்ளாகவே பணி நியமனம் வழங்கபட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பலன் பெறும் நிலையில், அதே காலகட்டத்தில் தேர்வு நடைமுறைகளை சந்தித்த ஆண் காவலர்களையும் சமமாக பாவிக்க வேண்டும் எனவும், ஆண் காவலர்கள் நியமனத்திற்கு 11 மாதங்கள் தாமதமானத்திற்கு அவர்கள் காரணமல்ல என்பதால், அவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், 12 வாரங்களில் அவர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கும் நடைமுறையை முடிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

Updated On: 11 Feb 2023 8:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...