/* */

வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை!

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்க சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை!
X

கோப்புப்படம் 

தனியார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை கட்டுப்படுத்துதல் என்ற நடவடிக்கையாக, சொந்த வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 198 மற்றும் மத்திய மோட்டார் வாகன விதி 50 ஆகியவற்றின் கீழ், 2024 மே 02ஆம் தேதி முதல் வழக்குப் பதிவு செய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், வழக்கறிஞர்கள் சட்டம் 1961 இன் கீழ், சட்ட பூர்வ அமைப்பான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சில், பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்களின் RC புத்தகங்கள் மற்றும் பதிவுச் சான்றிதழ்களைச் சரிபார்த்து பிறகு வாகன ஸ்டிக்கர்களை வெளியிடுகிறது.

வழக்கறிஞர் சங்கத்தால் சரிபார்ப்புக்கு பிறகு வழக்கப்படும் ஸ்டிக்கர்கள், நீதிமன்ற வளாகங்களில் தடையின்றி நுழைவதற்கும், பார்க்கிங் செய்வதற்கும், போக்குவரத்து விதிகளில் இருந்து விலக்கு பெறுவதற்காக மட்டுமல்லாமல் வக்கீல் அல்லாதவர்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், வழக்கறிஞர்களின் ஸ்டிக்கர்களை அகற்ற வேண்டும் என்பது சட்ட விதிகளுக்கு எதிரானது. மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 198, வாகனத்தைச் சேதப்படுத்துவதைத் தடுக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. மத்திய மோட்டார் வாகன விதிகளின் 50வது விதி, குறைபாடுள்ள நம்பர் பிளேட்டுகளை தடுக்க உதவுகிறது.

சட்டரீதியான அங்கீகாரம் பெற்ற வழக்கறிஞர்களின் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் ஸ்டிக்கர்களை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனவே, அதனால் சட்டரீதியாக, முறையாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்களின் வாகனங்களில் உள்ள வக்கீல்கள் ஸ்டிக்கர்களை அகற்ற வேண்டும் என்ற அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

Updated On: 29 April 2024 1:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  3. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  4. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  5. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  6. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  7. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  8. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  9. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!