/* */

லோடுமேன் பணி ஒருபுறம்; பிரசாரம் மறுபுறம்; அசத்தும் அதிமுக வேட்பாளர்

மானாமதுரை நகராட்சிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பழனி, ஒருபுறம் லோடுமேன் பணியையும், மறுபுறம் பிரசாரம் எனவும் அசத்தி வருகிறார்.

HIGHLIGHTS

லோடுமேன் பணி ஒருபுறம்; பிரசாரம் மறுபுறம்; அசத்தும் அதிமுக வேட்பாளர்
X

சுமை தூக்கும் பணியில் பிசியாக உள்ள வேட்பாளர் பழனி. 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி 14 வார்டு பகுதிக்கு, அதிமுக சார்பில் பழனி (56) என்பவர் களத்தில் உள்ளார். இவர் 40ஆண்டுகளுக்கு மேலாக, சுமை தூக்கும் தொழிலாளியாக, அப்பகுதி மரக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். தற்போது, மானாமதுரை 14வது வார்டு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.


பகல் நேரத்தில் வழக்கம் போல் தனது கூலி வேலையை செய்து வரும் வேட்பாளர் பழனி, காலை மற்றும் மாலை நேரங்களில், வெள்ளை சட்டை, வேட்டி, தோளில் கட்சித் துண்டு சகிதம், ஒரு அரசியல்வாதியாக மாறி, ஒவ்வொரு வீடு வீடாக தனியாகவே சென்று, வாக்கு சேகரித்து வருகிறார்.

ஓட்டு கேட்கும் போதே வாக்காளர்களிடம் "இரண்டு முறை இங்கு போட்டியிட்டேன். ஒருமுறை இந்த வார்டு மக்கள் கேட்டு கொண்டதன் அடிப்படையில் நான் வாபஸ் வாங்கினேன். இன்னொரு முறை 18ஓட்டில் தோல்வி அடைந்தேன். சாதாரண லோடுமேன் தொழிலாளிக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள். எனக்கு ஏழைகளின் கஷ்டம் நன்கு தெரியும். அவர்களுக்கு நிச்சயம் உதவுவேன்" என்று உருக்கமாக பேசுகிறார். இது வாக்காளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 9 Feb 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  3. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  6. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  7. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  10. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்