/* */

Let Us Respect Women Police-பெண் போலீசாருக்கு சிறப்பு மரியாதை செலுத்துவோம்..!

போலீசாரின் பணி சற்று கடுமையானது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதிலும் குறிப்பாக பெண்கள் காவல்துறையில் பணி செய்வது சவாலானது.

HIGHLIGHTS

Let Us Respect Women Police-பெண் போலீசாருக்கு சிறப்பு மரியாதை செலுத்துவோம்..!
X

let us respect women police-பெண் போலீசார் (கோப்பு படம்)

பெண் போலீசார் என்றால் போலீஸ் பணிகளில் கூடுதல் சிரமங்களை அனுபவிக்க வேண்டி வரும். காரணம், என்ன தான் ஒரு பெண் அரசு வேலைக்கு சேர்ந்து சம்பாதித்தாலும், குடும்ப நிர்வாகத்திலும் அவர்களின் பங்கு அவசியம் இருக்க வேண்டும். போலீஸ் நிர்வாகத்தை பொறுத்தவரை பணி வழங்குவதில் ஆண், பெண் பேதம் என்பதே கிடையாது.

கைதிகளை கோர்ட்டிற்கு அழைத்துச் செல்லுதல், கோர்ட்டில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லுதல், இரவு ரோந்து, சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு, புலன் விசாரணை, ஸ்டேஷனுக்கு வரும் புகார் மீதான விசாரணை, தலைவர்கள் பாதுகாப்பு பணி, அரசியல் கட்சி நிகழ்வுகளின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுதல் என்று ஆண் போலீசார் பார்க்கும் அத்தனை வேலைகளையும் பெண் போலீசாரும் பார்த்தே ஆக வேண்டும்.

மீண்டும் நினைவூட்டுகிறோம். போலீசில் வேலை வாங்கும் போது ஆண் போலீஸ், பெண் போலீஸ் என்ற பேதம் பார்ப்பதே இல்லை. அங்கு எல்லோரும் போலீஸ் மட்டுமே. காக்கிச் சீருடை மட்டுமே. பெண் போலீசாரின் சீருடைகளையாவது மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அதனை பரிசீலித்தார். ஆனால் என்ன காரணமோ அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.

போலீஸ் பணிகளில் ஈடுபடும் நேரம், பலருக்கு இயற்கை உபாதைகளை கூட கழிப்பது எவ்வளவு சிரமம் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. நடு ரோட்டில் தலைவர்கள் பாதுகாப்பிற்கு பல மணி நேரம் நிற்கும் பெண் போலீசார், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமலும், குடிநீர் கூட குடிக்க முடியாமலும் பல நேரங்களில் பட்டினியுடன் கூட பாதுகாப்பு புணியில் ஈடுபட வேண்டிய நிலை காணப்படுகிறது. வேறு எந்த அரசுத்துறையிலும் பெண்களுக்கு இப்படி ஒரு சிரமம் இருந்ததில்லை.

இதனை விளக்க அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தை உதாரணமாக காட்டுகிறோம். இந்த சம்பவத்தில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தலைவரின் பிறந்த நாள் விழா. அவருக்கு ஒரு நினைவரங்கம் கட்டப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் அந்த தலைவரின் பிறந்த நாள் அன்று இரண்டு அல்லது நான்கு அமைச்சர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். ஒரு மணி நேரம் நிகழ்ச்சி நடக்கும். அந்த தலைவரை பாராட்டி பேசி விட்டு, கூடியிருக்கும் மக்களை விருந்து சாப்பிடச் சொல்லி விட்டு அமைச்சர்கள் புறப்படுவார்கள்.

தமிழக அமைச்சர்களில் யாருக்குமே எந்தவித மிரட்டலும், உயிருக்கு அச்சுறுத்தலும் கிடையாது. தவிர தமிழக அமைச்சர்கள் வரும் போது பெரும் தள்ளுமுள்ளு ஏற்படும் அளவுக்கு கூட்டமும் கூடாது. அப்படி இருந்தும், அமைச்சர் வரும் போது நுாறு முதல் நுாற்றைம்பது போலீசார் பாதுகாப்பிற்கு நின்றால் ஒரு பந்தா தானே. குறிப்பாக பெண் போலீசார் பாதுகாப்பிற்கு நின்றால் கூடுதல் பந்தா தானே. அந்த ஒரு கலாசாரம் தமிழகத்தை சீரழித்து வருகிறது. இந்த கலாசாரம் எப்படி உருவானது எப்படி என்பதும் விந்தைதான்.

இப்படி ஒரு தலைவரின் பிறந்த நாள் விழா அ.தி.மு.க., ஆட்சியின் போது நடைபெற்றது. விழா மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. நான்கு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் என்று பிளக்ஸ்கள், பேனர்கள் அச்சிடப்பட்டு பத்திரிக்கை, நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டு விட்டது. சம்மபந்தப்பட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் 20க்கும் மேற்பட்ட பெண் போலீசாரையும், 40க்கும் மேற்பட்ட ஆண் போலீசாரையும் அந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பிற்கு அனுப்புகிறார். தவிர டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்களும் பாதுகாப்பிற்கு வருவார்கள்.

சம்மந்தப்பட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பெண் போலீசாரை பாதுகாப்பிற்கு அனுப்பும் போதே, நிகழ்ச்சி 5 மணிக்கு தொடங்குகிறது. ஒரு மணி நேரத்தில் முடிந்து விடும். அதிக நேரம் இழுத்தால் கூட எப்படியும் இரவு ஏழு மணிக்குள் முடிந்து விடும். நீங்கள் அப்படியே வீட்டிற்கு சென்று விட்டு, நாளை காலை 6 மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்து விடுங்கள் எனக்கூறுகிறார்.

அதனை ஏற்றுக்கொண்ட பெண் போலீசார் அந்த நிகழ்ச்சிக்கு செல்கின்றனர். வழியில் ஒரு பெண் இட்லி, தோசை மாவு விற்பனை செய்கிறார். சரி இரவு ஏழு மணிக்கு வீட்டிற்கு சென்று விடுவோமே, மாவு வாங்கிக்கொண்டால் வீட்டிற்கு சென்றதும் இட்லியோ, தோசையோ இரவு டிபனுக்கு ரெடி செய்யலாம் என நினைத்து 20 போலீசாரும் தங்கள் குடும்பத்திற்கு தேவையான அளவு ஒரு கிலோ முதல் ஒண்ணரை கிலோ வரை இட்லி, தோசை மாவு வாங்குகின்றனர்.

தங்கள் குடும்பத்தினரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு, இட்லி மாவு வாங்கியிருக்கிறேன். இரவு ஏழு மணிக்கு வீட்டிற்கு வந்து விடுவேன். தோசை ஊற்றலாம் என தகவல் சொல்லி விடுகின்றனர். பெண் போலீசாரின் வீட்டு குழந்தைகளுக்கு ஒரே குஷி. அப்பாடா இன்று அம்மா கையால் இட்லி, தோசை சாப்பிடலாம். அம்மா சுவையாக செய்து தருவார்கள் என மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.

நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு மாவு பாக்கெட்டுகளுடன் வந்த போலீசார், பாக்கெட்டுகளை கையில் பிடித்தபடி நிற்க முடியாது என்பதற்காக மண்டபத்தின் சமையல் அறையில் ஒரு பெரிய பாத்திரத்தில் பத்திரமாக வைத்து விட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அளவுக்கு கூட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக இருந்தாலும், நிகழ்ச்சிக்கு வருவது அமைச்சர்களே...! அவர்கள் முன்னால் பல போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது போல் பாவனை காட்டினால் தானே அமைச்சர்களின் மனம் மகிழும். எனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

ஐந்து மணிக்கு நிகழ்ச்சி துவங்க வேண்டும். கூட்டம் கூடியுள்ளது. ஆனால் அமைச்சர்கள் வரவில்லை. ஆறு மணி... ஏழு மணி... எட்டு மணி... என நேரம் கடந்து கொண்டே இருக்கிறது. பெண் போலீசார்களின் வீடுகளில் இருந்து மொபைலில் குழந்தைகள் அழைத்துக் கொண்டு உள்ளனர். பதில் சொல்ல முடியாமல் போலீசார் தவிக்கின்றனர். உயர் அதிகாரிகளுக்கும் என்ன செய்வது என்பது தெரியவில்லை. ஒரு வழியாக இரவு 10.15 மணிக்கு அமைச்சர்கள் நான்கு பேரும் வருகின்றனர்.

நிகழ்ச்சி இரவு 11.45 மணி வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி முடிந்து பெண் போலீசார் வீட்டிற்கு கிளம்ப இரவு 12 மணி ஆகிறது. தாங்கள் வாங்கி வைத்த இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளை சென்று பார்க்கின்றனர். அவைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு புளித்துப்போய் விட்டன. எனவே மாவு பாக்கெட்டுகளை துாக்கி கீழே போட்டு விட்டு, பெண் போலீசார் கண்ணீர் மிதக்கும் கண்களுடன் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டதை பார்க்கும் போது, நமக்கும் மனது வலித்தது.

அரசியல்வாதிகள் பந்தா காட்டுவதற்காக இந்த 20 பெண் போலீசாரின் குடும்பம் அன்று ஒரு நாள் சந்தோஷத்தை இழந்தது. தேர்தல் நேரம், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நேரங்களில் போலீசார் மட்டுமின்றி, போலீஸ் குடும்பங்களும் சிரமத்தை அனுபவிக்கின்றன என்பதை நினக்கும் போது, அவர்களது சீரிய பணிக்கு ஒரு சிறப்பு மரியாதை செலுத்த வேண்டும் என்றே தோன்றுகிறது. எனவே மகளிர் போலீசாரை மதிப்போம்.... அவர்களுக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கி அவர்கள் பணி செவ்வனே நடைபெற நாமும் ஒத்துழைப்போம்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் நிச்சயம் நம் சிரமங்களை புரிந்து கொண்டு நம் பணிச்சூழலுக்கு ஏற்ற வகையில் பணி நேரம் வழங்கியும், சீருடைகளில் சிறு, சிறு மாற்றங்கள் செய்தும் உதவி செய்வார் என பெண் போலீசார் நம்புகின்றனர். நாமும் முதல்வர் நிச்சயம் பெண் போலீசாருக்கு உதவுவார் என நம்புவோம்.

Updated On: 20 Nov 2023 4:27 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா