/* */

விஜயகாந்த் மறைவு: தலைவர்கள் இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

HIGHLIGHTS

விஜயகாந்த் மறைவு: தலைவர்கள் இரங்கல்
X

உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவு செய்தியை கேட்டு மனவேதனை அடைந்தேன். பொதுவாழ்வு & கலைத்துறையில் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, விஜயகாந்தின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்:

விசிக தலைவர் திருமாவளவன்

தேமுதிக தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்தின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த துயருற்றேன். அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு. விஜயகாந்தை பிறந்து வாடும் அவரது குடும்பத்தினர், கட்சி தோழர்கள், ரசிகர்கள், திரையுலகினர் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்

சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன்

கேப்டன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மனிதநேயமிக்க தலைவர். யார் வந்தாலும் உணவு அளித்து மகிழ்ச்சி கண்டவர். ஒரு நல்ல தலைவரை இந்த நாடு இழந்து விட்டது. அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர்.

தன்னலமற்ற தலைவர். தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர். பாரதப் பிரதமர் பேரன்பைப் பெற்றவர்.

கேப்டன் விஜயகாந்த் மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது இன்னுயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும். கேப்டன் விஜயகாந்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

Updated On: 2 Jan 2024 7:21 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  2. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  3. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  4. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  5. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  6. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...