/* */

12 திருக்கோயில்களில் இந்த மாதம் குடமுழுக்கு: இந்து சமய அறநிலையத்துறை

தமிழ்நாட்டில் 12 திருக்கோயில்களில் இந்த மாதம் குடமுழுக்கு நடைபெறவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

12 திருக்கோயில்களில் இந்த மாதம் குடமுழுக்கு:  இந்து சமய அறநிலையத்துறை
X

மாதிரி படம் 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 12 திருக்கோயில்களுக்கு இந்த மாதம், குடமுழுக்கு நடைபெறவுள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள புராதனமான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து புனரமைப்புப் பணிக்கான ஒப்புதலுக்கு பரிந்துரை செய்வதற்கு மாநில அளவில் மற்றும் மண்டல அளவில், வல்லுநர் குழுவின் கூட்டம் வாரம் இருமுறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று 200க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த மாதம் 13ம் தேதி அன்று குடமுழுக்கு நடைபெறும் கோவில்கள்:

  • கடலூர் மாவட்டம், பெரியகங்கணாங்குப்பம், அருள்மிகு சேமகளத்து மாரியம்மன் திருக்கோயில்,
  • திருநெல்வேலி மாவட்டம், மேலநத்தம், அருள்மிகு அருந்தபசு அம்மன் திருக்கோயில்,
  • தஞ்சாவூர் மாவட்டம், இரயிலடி, அருள்மிகு சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயில்,
  • கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையம், அருள்மிகு பட்டத்தரசியம்மன் திருக்கோயில்,
  • சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்தூர் அருள்மிகு ஏகாம்பரநாதசுவாமி திருக்கோயில்

இந்த மாதம் 15ம் தேதி அன்று குடமுழுக்கு நடைபெறும் கோவில்கள்

  • விருதுநகர் மாவட்டம், குன்னூர் அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில்,
  • விருதுநகர் மாவட்டம், வத்ராயிருப்பு நகர், அருள்மிகு கம்மாள கருப்பசாமி திருக்கோயில்,
  • காஞ்சிபுரம் மாவட்டம், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலுக்கு 27 ம் தேதி அன்றும், புதுக்கோட்டை மாவட்டம், அருள்மிகு ஆதிமத்தியார்ஜீனேஸ்வரர் திருக்கோயிலுக்கு அடுத்த மாதம் 9 ம் தேதி அன்றும் குடமுழுக்கு நடைபெறும்

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, அருள்மிகு அழகு நாச்சியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு சிறப்பாக நடைபெறவுள்ளது.

Updated On: 10 May 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  2. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  3. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  4. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  5. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  6. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  7. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  8. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  9. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்