/* */

கோடநாடு வழக்கு: கனகராஜின் உறவினருக்கு போலீஸ் காவல்

கோடநாடு வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கு:  கனகராஜின் உறவினருக்கு போலீஸ் காவல்
X

அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் 

நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, உதகை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையில் இன்று, நிபந்தனை ஜாமினில் உள்ள சயான், ஜாமினில் உள்ள உதயகுமார், குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்ட வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஷாஜகான் ஆஜரானார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புலன் விசாரணை சம்மந்தமாக விவரங்களை தெரிவிப்பதற்காக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு. மனுவில் மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். இதில், தொடர்புடையவர்கள் மீதும் விசாரணை தொடர்ந்து வருகிறது.

வழக்கில், தடயங்கள் அழித்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கடந்த, 25 ம் தேதி கனகராஜின், சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். இதில், தனபாலை விசாரிக்க, 5 நாள் போலீஸ் காவல் வழங்கி, நவ. 1 ம் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

இதேபோல், ரமேசுக்கு போலீஸ் காவல் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று விசாரணைக்கு வந்தது. இதில், ரமேஷுக்கு 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க, நீதிபதி இன்று அனுமதி அளித்துள்ளார். இவ்வாறு, அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

Updated On: 29 Oct 2021 8:06 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!