/* */

கோடநாடு வழக்கு: கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதருக்கு 5 நாள் போலீஸ் காவல்

கோடநாடு கொலை வழக்கில் கைதான கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதர் தனபாலை, 5 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கு: கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதருக்கு 5 நாள் போலீஸ் காவல்
X

கோடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தனபாலுக்கு 5 நாட்கள் அனுமதி தரப்பட்டுள்ளது.

கோடநாடு எஸ்டேட், கொலை, கொள்ளை வழக்கு கூடுதல் விசாரணையானது, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் மேற்பார்வையில், ஏ.டி.எஸ்பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஊட்டியில் உள்ள பழைய மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அரசு தரப்பு சாட்சிகள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடக்கிறது.

இதில் கோடநாடு எஸ்டேட் கொள்ளை வழக்கிற்கு மூலகாரணமாக இருந்த கனகராஜ், வாகன விபத்தில் இறந்துள்ளார். அந்த வழக்கையும் தனிப்படை போலீசார் சேலத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கோடநாடு கொள்ளை சம்பவம் நடைபெறும் முன்பே கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினரான ரமேசுக்கு தகவல் தெரிந்தும், காவல்துறையினரின் விசாரணையின் போது மறைத்து உள்ளனர்.

இதனால் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தனிப்படை போலீசார், அக் 25 ந் தேதி கைது செய்தனர். கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினரான ரமேஷ் ஆகிய இருவரை சேலத்தில் கைது செய்து, நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும், நவம்பர் 8 ந் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, இருவரும் கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, தனிப்படை போலீசார் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், கடந்த 26 ந் தேதி மனுதாக்கல் செய்தனர். இவ்வழக்கில், கனகராஜின் சகோதரர் தனபாலை மட்டும் கூடலூர் கிளை சிறையில் இருந்து தனிப்படை போலீசார் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், இன்று ஆஜர் படுத்தினர். அவரை, 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில், 5 நாட்கள் மட்டும் விசாரிக்க, நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்ய தனிப்படை போலீசார் தனபாலை அழைத்து சென்றனர்.

Updated On: 29 Oct 2021 12:48 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!