/* */

பயிற்சி டாக்டர்களுக்கு சம்பளம் கொடுத்த காமராஜர்..! உங்களுக்குத் தெரியுமா..?

முதல்வராக காமராஜர் பயிற்சி டாக்டர்களுக்கு சம்பளம் வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.

HIGHLIGHTS

பயிற்சி டாக்டர்களுக்கு சம்பளம் கொடுத்த காமராஜர்..!  உங்களுக்குத் தெரியுமா..?
X

படிக்காத மேதை காமராஜர்.

இன்று காமராஜர் பிறந்தநாள். அவரது பொற்கால ஆட்சியில் பல சுவையான நிகழ்வுகள் நடந்துள்ளன. அவைளைல் ஒன்றை இன்று பார்ப்போம்.

கர்மவீரர் காமராஜர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஒரு நாள், டாக்டர்கள் ராமச்சந்திரா, சிவராஜ், ரத்தினசபாபதி, கனகராஜ் தலைமையில் சுமார் 20 டாக்டர்கள் பெருந்தலைவரின் உதவியாளரை சந்தித்து காமராஜரை சந்திக்க அனுமதி கேட்டு பார்வையாளர் அறையில் காத்திருந்தனர். அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் ஜோதி வெங்கடாச்சலம் தங்கள் கோரிக்கையைக் கண்டு கொள்ளாததால் முதல்வரை சந்திக்க வந்திருந்தனர். விஷயம் கேள்விப்பட்ட காமராஜர் பார்வையாளர் அறைக்கு வேகமாக வந்து விட்டார். அனைவரையும் அமரச் செய்துவிட்டு காமராஜரும் அமர்ந்தார்.

நீங்களெல்லாம் யார்? என கனிவுடன் விசாரித்தார் காமராஜர்.

'ஐயா நாங்களெல்லாம் ஹவுஸ் சர்ஜன்' என ஒரு டாக்டர் பதிலளித்தார்.

'அப்படின்னா என்ன....? ' என்று மீண்டும் கேட்டார் காமராஜர்.

ஐந்து வருடம் டாக்டர் படிப்பு படிச்சுக்கிட்டு ஒரு வருஷம் பயிற்சி டாக்டராக வேலை பார்க்கிறவர்கள், ஐயா. நாங்க தான் இந்த ஒரு வருஷத்திலே வருகிற நோயாளிகளை சோதிப்பது, அவசர சிகிச்சை செய்யுறது, இரவும் பகலும் வார்டுகளில் இருக்கிற நோயாளிகளை பார்த்துக்கிறது, இந்த ஒரு வருஷ பயிற்சி முடிஞ்ச பிறகு தான் நாங்க டாக்டர் என்கிற பெயரில் வேலை பார்க்க முடியும், என விளக்கமளித்தார் ஒரு டாக்டர்.

சரி இப்ப என்னை எதுக்கு பார்க்க வந்தீங்க? மீண்டும் கேள்வி கேட்டார் காமராஜர்.

'ஐயா, இந்த ஒரு வருஷ பயிற்சிக் காலத்திற்கு எங்களுக்கு ஏதாவது உதவித்தொகை (Stipend) தரணூம்னு கேட்டுக்கிட்டு இருக்கோம் , மந்திரி அம்மா பாக்குறேன், செய்யறேன்னு சொல்றாங்களே தவிர எதுவும் செய்ய மாட்டேங்குறாங்க ..' டாக்டரில் ஒருவர் பதிலளித்தார்.

இதென்னய்யா அநியாயமா இருக்கு ...? அஞ்சு வருஷம் படிச்சிட்டு ஒரு வருஷம் ஓசியா வேலை வாங்குறது சரியில்லையே ? சரி நீங்க போங்க நான் அதை என்னான்னு பார்க்கறேன்' என்று தலைவர் அனைவரையும் கும்பிட்டு விட்டு வெளியேறுகிறார்.

இந்த சந்திப்பு நடந்து, நான்காம் நாள், பயிற்சி டாக்டர்கள் அனைவருக்கும் மாதம் 105 ரூபாய் சம்பளமும் கடந்து போன ஆறு மாதத்திற்கு சேர்த்து வழங்கப்படுமென்று உத்தரவும் வெளிவருகிறது. இன்று அந்த தொகை பல மடங்கு உயர்ந்து விட்டது. ஆங்கிலேயர் காலம் தொட்டு சம்பளம் இல்லாமல் பணி செய்த பயிற்சி மருத்துவர்களுக்கு எந்த போராட்டமும் இன்றி காமராஜரே சம்பளம் வழங்கினார் என்பது எத்தனை டாக்டர்களுக்குத் தெரியும்? இன்று அதாவது ஜூலை 15ம் நாள் கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள். இந்த நாளில் அவரது சேவையை நினைவு கூர்வோம்.

Updated On: 15 July 2023 6:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?