/* */

#justiceforsrimathi ஹேஸ்டேக் டிரெண்டிங்..

Justice for Srimathi Twitter-கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டுவிட்டரில் #justiceforsrimathi என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது..

HIGHLIGHTS

Justice for Srimathi Twitter
X

Justice for Srimathi Twitter

Justice for Srimathi Twitter-கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி சில நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிப்பட்ட நிலையில் கிடந்ததை கண்ட விடுதி காவலர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து பின்னர் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் வரும் நிலையில், மாணவியின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த பள்ளியின் நுழைவு வாயிலை உடைத்து பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் மீது கற்களை வீசியும், பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை சூறையாடினர்.

மேலும், பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்த மாணவிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளமான டுவிட்டரில் #justiceforsrimathi என்ற ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது. இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி பலரும் டுவிட்டர் பக்கத்தில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 4 April 2024 9:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!