/* */

உலகை ஆளும் இந்தியர்கள்- அன்று விவேகானந்தர் சொன்னது இன்று நடக்கிறது

Golden Words Of Swami Vivekananda in Tamil -உலகை ஆளும் இந்தியர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதால் அன்று விவேகானந்தர் சொன்னது இன்று நடப்பதாக நம்பப்படுகிறது.

HIGHLIGHTS

உலகை ஆளும் இந்தியர்கள்- அன்று  விவேகானந்தர் சொன்னது இன்று நடக்கிறது
X

சுவாமி விவேகானந்தா.

Golden Words Of Swami Vivekananda in Tamil-போர்ச்சுக்கல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத் , சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், சுரினாம் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி, கயானாவின் அதிபர் இர்பான் அலி, செஷெல்ஸ் அதிபர் வேவல் ராமகலவன் என உலகெல்லாம் இந்திய வம்சாவளி ஆட்சியாளர்களின் பட்டியல் நீள்கின்றது.

போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா மொசாம்பிக்கில் பிறந்தாலும் அவர்களின் பூர்வீகம் இந்தியாவின் கோவா பகுதிகள், அவரது உறவினர்கள் கோவாவில் உள்ள மார்கோவாவிற்கு அருகிலுள்ள ருவா அபேட் ஃபரியா கிராமத்துடன் தொடர்புடையவர்கள்.

இவருக்கு இந்திய வம்சாவளி அட்டையினை மோடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத் பீகார் பகுதிகளை பூர்வீகமாக கொண்டவர், முன்னோர்களுக்கான தர்ப்பண வழிபாடுகளுக்காக அவர் வாரணாசிக்கு அடிக்கடி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் கேரள தொடர்புகளை கொண்டவர்.

Indians will rule the world, Swamy Vivekanandas statement happening todayசுரினாம் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி ஒரு இந்து, சுரினாம் என்பது தென் அமெரிக்காவில் உள்ள நாடு, இந்த சந்திரிகா பிரசாத் சமஸ்கிருதத்தில் தான் பதவியேற்றார்.

கரீபியன் நாடான கயனாவின் அதிபர் இர்பான் அலி. இந்திய பூர்வீகம் கொண்டவர் அடிக்கடி இந்தியா வருபவர். செஷெல்ஸ் அதிபர் வேவல் ராமகலவன் பீகாரை சேர்ந்தவர் அடிக்கடி கங்கை கரைக்கு வரும் இந்து.

இவை எல்லாம் உலக அளவில் பதவியில் இருக்கும் ஆட்சியாளர் பட்டியல் , முன்னாள் அதிபர்கள், அதிபராக காத்திருப்பவர்கள் இன்னும் உண்டு, அமைச்சர்கள் அதிகாரிகள் பெயர் பட்டியல் இன்னும் நீளமானது.

Indians will rule the world, Swamy Vivekanandas statement happening todayஇந்த வரிசையில்தான் சக்தி வாய்ந்த அமெரிக்கா, பிரிட்டனின் உயர்பதவிகளும் இந்தியருக்கு வந்திருக்கின்றன. ஆக விவேகானந்தர் சொன்னதுதான். "ஓ ஐரோப்பியர்களே, நீங்கள் எங்களை அடிமைகளாக கருதி உலகெல்லாம் இழுத்து செல்வதில் பெருமிதம் கொள்கின்றீர்கள். அது பரிதாபத்துகுரியது. ஒரு பெரும் காரியத்துக்காக இதனை செய்கின்றீர்கள் என்பதை உங்கள் மமதை அறியவில்லை. காலம் மிக பெரிய விஷயத்துக்காக உங்களை பயன்படுத்துகின்றது. என்பதை அறியாத மயக்கத்தில் எங்களை அடிமை என இழிவு செய்கின்றீர்கள். பழம் உண்பதாக கருதி விதைகளை எங்கெல்லாமோ விதைக்கும் பறவைகளின் வேலையினைத் தான் செய்கின்றீர்கள். உங்களை பரிதாபத்தோடத்தான் பார்க்க வேண்டும். காரணம் பின்னொருநாளில் மாபெரும் அதிசயங்கள் நடப்பதை உலகம் காணும். அன்று எங்களை அடிமைகள் என்றவர்கள் முகமெல்லாம் காணாமலே போகும்" என்று சொன்னார். அவர் சொன்னது தற்போது நடந்து வருவதை உலகம் ஊர்ஜிதம் செய்கிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 9 April 2024 4:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?