/* */

அதி தீவிர புயலால் எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும்.?

மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த அதி தீவிர புயல் (தவ்-தே) இன்று (17.05.2021) காலை 05.30 மணியளவில் உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது .

HIGHLIGHTS

அதி தீவிர புயலால் எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும்.?
X

தேதி: 17.05.2021 நேரம்: 1215 மணி

நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த அதி தீவிர புயல் (தவ்-தே) இன்று (17.05.2021) காலை 05.30 மணியளவில் உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது . தற்போது டையூ விலிருந்து 160 கிலோமீட்டர் தெற்கு தென்கிழக்கு திசையிலும், மும்பை கடல் பகுதியிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் மையம்கொண்டுள்ளது. இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை /இரவு குஜராத் மாநிலத்தின் போர்பந்தருக்கும் மஹுவாவுக்கும் இடையே கரையை கடக்கும் .

வெப்பச்சலனம் காரணமாக

17.05.2021, 18.05.2021: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

19.05.2021: நீலகிரி, சேலம், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் .

20.05.2021, 21.05.2021 : நீலகிரி தேனி, மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்):

பந்தலூர் (நீலகிரி) 13, சோலையாறு (கோவை), வால்பாறை (கோவை ) தலா 9 சின்னக்கல்லார் (கோவை) 6, அகரம் சீகூர் (பெரம்பலூர்), பெருஞ்சாணி அணை(கன்னியாகுமரி) தலா 4, பெரியாறு (தேனி), திருமனுர் (அரியலூர்), நடுவட்டம் (நீலகிரி), கிழச்செருவை (கடலூர்) தலா 3, தென்காசி, திருவையாறு (தஞ்சாவூர்), உடுமலைப்பேட்டை தலா 2, ஒகேனக்கல் (தர்மபுரி), ஓட்டாஞ்சத்திரம் (திண்டுக்கல்), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) தலா 1 .

கடல் உயர் அலை முன்னறிவிப்பு: தென் தமிழக கடலோரப் பகுதியில் (குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை) 18.05.2021 இரவு 11.30 வரை கடல் அலை 2.0 முதல் 2.3 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .

Updated On: 19 May 2021 3:21 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  2. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  3. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  4. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  5. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  6. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  7. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  9. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  10. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்