சனாதனத்துக்கு ஆளுனர் ரவி மீண்டும் புது விளக்கம்: வெடிக்கும் சர்ச்சை..!

சனாதனத்துக்கு மீண்டும் புதிய விளக்கத்தையும் அர்த்தத்தையும் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி தந்துள்ளார். இதனால் தமிழகத்தில் சர்ச்சை வெடிக்கும் சூழல் நிலவுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சனாதனத்துக்கு ஆளுனர் ரவி மீண்டும் புது விளக்கம்: வெடிக்கும் சர்ச்சை..!
X

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி 

தமிழக ஆளுனர் ரவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு சனாதனம் குறித்து பேசினார். ஆனால் மாநிலத்தின் உயர்பதவி வகிக்கும் ஆளுனர், ஒரு மதம் சார்ந்து பேசக்கூடாது என தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பின்னர் மீண்டும் ஒரு விழாவில் சென்னையில் பேசிய ஆளுனர், சனாதனம் என்பது மதம் அல்ல என விளக்கம் அளித்தார். இதையடுத்து, தற்போது வேலூர் விழாவில் நதி, பூமி உள்ளிட்ட பஞ்ச பூதங்களை வணங்குவதே சனாதனம் என புது விளக்கத்தை அளித்துள்ளார்.

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் ஒருங்கிணைந்து வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயண பீடத்தில் பாலாறு பெருவிழா நடத்தியது. இவ்விழாவில் நாராயணி பீடத்தின் சக்தி அம்மா மற்றும் தமிழக ஆளுனர் ஆர்.என் ரவி பங்கேற்றனர். விழாவை தொடங்கி வைத்து பேசிய ஆளுனர் ஆர்.என். ரவி, நதிகளை நாம் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும். சனாதனத்தின் மூலமே பூமியில் உள்ள அனைத்து விதமான உயிர்களையும் நதிகளையும் காப்பாற்ற முடியும். இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்கள்; இது தான் சனாதனம். பூமியை வாழ்க்கைக்கான ஒரு ஆதாரமாக பார்க்க கூடாது அதை தெய்வம் போல வணங்க வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும் இனிவரும் 40 ஆண்டுகளுக்குள் சிறிய தீவுகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. கார்பன் வெளியேற்றத்தால் உலக சுற்றுச்சூழலில் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. அதனால் நாம் இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டியது அவசியம் என ஆளுனர் ரவி தெரிவித்தார்.

இந்த பூமியில் மனிதர்கள் தோன்றிய ஆதிகாலம் முதல் பஞ்ச பூதங்களை வணங்கும் முறை உள்ளது. சிலப்பதிகாரத்தில் அரசன் கூட குளங்களை வெட்டி பாதுகாக்க வேண்டும் என இளங்கோவடிகள் சொன்னது போல, ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்ரித் சரோவர் என்ற திட்டத்தை பிரதமர் செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் 2023 ஆகஸ்ட் மாதத்திற்குள் 50 ஆயிரம் குளங்களை வெட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழக ஆளுனர் ரவி கூறினார்.

Updated On: 2022-07-02T17:25:38+05:30

Related News

Latest News

 1. வழிகாட்டி
  மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் 4300 பணியிடங்களுக்கான அறிவிப்பு
 2. ஈரோடு
  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,400 கன அடி
 3. நாமக்கல்
  பெண் குரலில் பேசி ரூ.5 லட்சம் மோசடி: மர்ம நபர் மீது சைபர் கிரைம்...
 4. ஆன்மீகம்
  இந்த நான்கு ராசிக்காரர்களை சிவபெருமானுக்கு ரொம்ப பிடிக்குமாம்
 5. இராசிபுரம்
  பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 2 பெண் தொழிலாளர்கள்
 6. இந்தியா
  இந்திய விமானப்படைக்கு வானில் பறக்கும் ராட்சஷன்
 7. நாமக்கல்
  இணை இடுபொருட்கள் வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது: வேளாண்துறை...
 8. நாமக்கல்
  நாமக்கல் முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீடு, 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு...
 9. திருப்பூர்
  நுாற்பாலைகளுக்கு நேரடியாக பஞ்சு விற்பனை; மத்திய அரசுக்கு 'சைமா'...
 10. சைதாப்பேட்டை
  சென்னையில் மாநகராட்சி குப்பை வாகனம் திடீரென தீப்பிடித்து விபத்து