/* */

தமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு

Tngea state meeting, protest against the Tamil Nadu governmentதமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துவது என திருச்சியில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு
X

Tngea state meeting, protest against the Tamil Nadu governmentதிருச்சியில் நடந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் செல்வம் பேசினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில செயற்குழு கூட்டம்

Tngea state meeting, protest against the Tamil Nadu governmentதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் மாநில தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பழனிச்சாமி வரவேற்புரை ஆற்றினார். மாநில துணை பொதுச் செயலாளர் சீனிவாசன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில தலைவர் அன்பரசு தலைமை உரையாற்றினார்.


பொதுச் செயலாளர் செல்வம் கடந்த கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்க உரையாற்றினார். மாநில பொருளாளர் தோழர் பாஸ்கரன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். விவாதத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு பங்கேற்றார்கள். மாநில செயலாளர் அம்சராஜ் நன்றி கூறினார்.

Tngea state meeting, protest against the Tamil Nadu governmentசெயற்குழுவில் மாநில மாநில துணைத் தலைவர்கள் ஞானதம்பி, பெரியசாமி, பழனியம்மாள் கிறிஸ்டோபர், பரமேஸ்வரி, செல்வராணி, மாநில துணை பொதுச் செயலாளர் வெங்கடேசன், வாசுகி, மாநில செயலாளர்கள் டெனியல்ஜெயசிங், சுமதி, ஹேமலதா, கோதண்டபாணி, குபேரன், திருச்சி மாவட்ட தலைவர் முனைவர் பால் பாண்டி, மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் சகாதேவன், ஜீவானந்தம் சிவசங்கர், மாவட்ட இணை செயலாளர்கள் அல்போன்ஸ், பாபு, மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சத்தியவாணி மற்றும் அனைத்து மாவட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள், வட்டக்கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

தீர்மானங்கள்

செயற்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tngea state meeting, protest against the Tamil Nadu governmentதமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை - 152 ஐ ரத்து செய்திட , தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்திட வேண்டும்,டி.ஏ. சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும், ஒப்பந்தம்,புற ஆதார முகமை (அவுட்சோர்சிங்) முறைகளை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்

Tngea state meeting, protest against the Tamil Nadu governmentசி.பி.எஸ். ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல், சத்துணவு, அங்கன்வாடி,வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்குவது.

ஆர்ப்பாட்டம்

Tngea state meeting, protest against the Tamil Nadu governmentசாலைப்பணியாளர்களின் 41மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றுவது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 08/11/2022 அன்று தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகர் ஆர்ப்பாட்டம் நடத்துவது.

மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 31 Oct 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?