/* */

அரசு மருத்துவர்களின்பணிகள்: ஆட்சியர்களுக்கு உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்களின் வருகையை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டப்பட்டுள்ளது

HIGHLIGHTS

அரசு மருத்துவர்களின்பணிகள்: ஆட்சியர்களுக்கு  உத்தரவு
X

பைல் படம்

அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்களின் வருகையை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககந்தீப் சிங் பேடி கடிதம் எழுதியுள்ளார். அதில், “அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வருவதை மாவட்ட கலெக்டர்கள் தனிப்பட்ட கவனத்தில் எடுத்துக் கொண்டு கண்காணிக்க வேண்டும். புறநோயாளிகள் பிரிவுகளில் சரியான நேரத்தில் மருத்துவர்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புறநோயாளிகள் பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர்கள் காலை 7.30 மணிமுதல் பகல் 12 மணிவரை மருத்துவமனையில் இருப்பது கட்டாயம். பிற மருத்துவர்கள் காலை 9 மணிமுதல் 4 மணிவரை இருக்க வேண்டும். மருத்துவ கண்காணிப்பாளர் காலை 8 மணிக்கு பணியில் இருக்க வேண்டும். அவசரகால அடிப்படையில் 24 மணிநேரமும் தொடர்பில் இருக்க வேண்டும். மாவட்ட தலைமை மற்றும் பிற அரசு மருத்துவமனைகள் புறநோயாளிகள் பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர்கள் காலை 7.30 மணிமுதல் பகல் 12 மணிவரை மருத்துவமனையில் இருப்பது கட்டாயம். 24 மணிநேர ஷிப்டுகளில் இருக்கும் மருத்துவர்கள் மாலை 3 மணிமுதல் 5 மணிவரை புறநோயாளிகளை பரிசோதனை செய்ய வேண்டும். பல் மற்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் பணியில் இருக்க வேண்டும்.

தலைமை மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரையும், மாலை 3 மணிமுதல் 5 மணி வரையும் மருத்துவமனையில் இருக்க வேண்டும். 1 முதல் 3 மருத்துவ அதிகாரிகளை கொண்ட சுகாதார நிலையங்களில் காலை 9 மணிமுதல் 4 மணிவரை மருத்துவர்கள் புறநோயாளிகளை பார்க்க வேண்டும். மருத்துவ அதிகாரிகளை கொண்ட சுகாதார நிலையங்களில் 24 மணிநேரமும் ஷிப்ட் அடிப்படையில் மருத்துவர்கள் புறநோயாளிகளை பார்க்க வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தங்கள் மாவட்ட மருத்துவமனைகளில் பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 July 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு