/* */

தேர்தல் முடிவு வெளியான பின்னர் தமிழகத்தில் என்ன நடக்கும் என தெரியுமா?

தேர்தல் முடிவு வெளியான பின்னர் தமிழகத்தில் என்ன நடக்கும் என தெரியுமா? என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

தேர்தல் முடிவு வெளியான பின்னர் தமிழகத்தில் என்ன நடக்கும் என தெரியுமா?
X

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தல் முடிவிற்கு பின்னர் ஒரு கட்சியில் அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மற்ற மாநிலங்களில் 63 தொகுதிகளிலும் கடந்த வெள்ளிக்கிழமை லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.

மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது. தமிழ்நாடு (39), அருணாச்சல பிரதேசம் (2 லோக்சபா தொகுதிகள்), அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகலா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) என வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு: மாநிலத்தில் 69.46% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாகத் தர்மபுரியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது வாக்கு சதவிகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாகத் தூத்துக்குடி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட நட்சத்திர தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகம் குறைந்துள்ளது.

முதலில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு வந்த நிலையில், நள்ளிரவில் வெளியான டேட்டாவில் 69.46% வாக்குகள் மட்டுமே பதிவானதாக கூறப்பட்டு இருந்தது. பொதுவாக இறுதி நம்பரில் வாக்குப்பதிவு அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்தது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் முக்கியமான நிர்வாகி ஒருவர் தேர்தல் முடிவுகள் வந்த பின் கட்சி மாறலாம் என்ற தகவல்கள் வருகின்றன. அதன்படி தலைவர் ஒருவரின் செயல்பாடுகள் சரியாக இல்லாத காரணத்தால் கட்சியை சேர்ந்த அந்த மூத்த நிர்வாகி வெளியேற முடிவு செய்துள்ளாராம். கட்சியில் அந்த தலைவர் முதிர்ச்சி இல்லாமல் செயல்படுகிறார், தேர்தல் நேரத்தில் தனக்கு எதிராகவே செயல்பட்டுவிட்டார். தன்னுடைய வெற்றிக்கு எதிராக செயல்பட்டுவிட்டார்.

அதனால் அவருக்கு கீழ் இருக்க முடியாது. அதனால் கட்சியை விட்டு செல்கிறேன் என்ற முடிவில் இருக்கிறாராம். தான் ஒரு மூத்த தலைவர்.. தனக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதையை கொடுக்கவில்லை. மரியாதையை விடுங்க. தேர்தலில் தனக்கு எதிராக தலைவரே காய்களை நகர்த்தி உள்ளார். தேர்தலுக்கு பின் அந்த நபரை மாற்ற வேண்டும். அவரை மாற்றவில்லை என்றால் மொத்தமாக கட்சியை விட்டு செல்ல அந்த மூத்த தலைவர் திட்டமிட்டு வருகிறாராம். ஜூன் 4ம் தேதிக்கு பின் தமிழ்நாட்டில் பல அரசியல் பூகம்பங்கள் வெடிக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Updated On: 21 April 2024 3:18 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  2. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  3. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  5. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  10. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது