/* */

"திமுகவின் கொள்கை என்பது வேறு, மக்களின் நம்பிக்கை என்பது வேறு" -சைவசமய சான்றோர்கள்

"திமுகவின் கொள்கை வேறு, மக்களின் நம்பிக்கை வேறு" -தமிழக அரசு அனைவருக்குமான அரசாக செயல்பட வேண்டும் -சைவசமய சான்றோர்கள் கோரிக்கை.

HIGHLIGHTS

திமுகவின் கொள்கை என்பது வேறு, மக்களின் நம்பிக்கை என்பது வேறு  -சைவசமய சான்றோர்கள்
X

தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது தருமபுரம் ஆதீன மடம். 16-ம் நூற்றாண்டில் இருந்து செயல்பட்டு வரும் இந்த மடம், பழமையான சைவ மடங்களில் ஒன்று. தமிழகத்தில் பல சிவாலயங்கள் இதனுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. பல்வேறு அறப்பணிகளையும், ஆன்மீகப் பணிகளையும் சாதி மத வேறுபாடின்றி செய்து வருகிறது. மயிலாடுதுறையில் மகப்பேறு மருத்துவ நிலையம் அமைத்தும், சிங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனை, அடையார் புற்றுநோய் மருத்துவமனை(அடையாறு கான்சர் இன்ஸ்டிடியூட்) போன்ற பொது நிறுவனங்களுக்குப் பெருந்தொகை வழங்கியும், ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க கட்டண உதவி புரிந்தும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.


மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தவுடன், புதிய மாவட்ட நிர்வாகத்திற்கு தேவைப்படும் அலுவலகங்கள், மருத்துவக் கல்லூரி, காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் கட்ட இடம் வேண்டும் என்றவுடன், 60 ஏக்கர் நிலத்தை உடனடியாக வழங்கியது இந்த தருமபுரம் ஆதினம் தான். தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் இவர்கள் செய்த பணிகள் அதிகம்.


தருமபுரம் ஆதினம் அவர்களை பல்வேறு மாநில ஆளுநர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு சமுதாயப் பெரியவர்கள், மாற்று மதத் தலைவர்கள் உட்பட அனைவரும் நேரில் சந்தித்து ஆசிபெற்றுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் உட்பட சட்டமன்ற உறுப்பினர் பலரும் இந்த ஆதினத்தை நேரில் சந்தித்து ஆசி பெற்று வந்துள்ளார்.


ஆண்டு தோறும் இந்த ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தில் பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படும், அதில் ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர்த்தி, ஆதீன சீடர்கள் மற்றும் பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்.

தருமபுர ஆதீனகர்த்தராக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் 2019 டிசம்பர் 4 ம் தேதி காலமானார்.

அதைத் தொடர்ந்து ஆதீனத்தின் 27 வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அதே ஆண்டு டிசம்பர் 13 ம் ஆதீனகர்த்தராக பொறுப்பேற்றார். அன்றே ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்து பட்டினப் பிரவேசம் நடந்தது.

தருமபுர ஆதீனகர்த்தராக பதவி வகித்து வரும் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியரை கோவில் வழிபாட்டிற்காக பல்லக்கில் தூக்கி செல்வது வழக்கம். இதை பட்டினப் பிரவேசம் என்று அழைப்பார்கள்.

இந்த நடைமுறைக்கு விசிக, திக உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் தான் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி இந்த நிகழ்விற்கு தடை விதித்துள்ளார்.

மனிதனை மனிதனே சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது என்று கூறி திராவிடர் கழகம் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் கோட்டாட்சியர் பாலாஜி.

இந்த தடை உத்தரவை எதிர்த்தும், பல்லக்கில் சுமக்கும் நிகழ்வுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தியும் ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். "காலம் காலமாக நடைபெறும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி குருவுக்கு நாங்கள் அளிக்கும் மரியாதை. அதை மாற்றக்கூடாது," என்று அவர்கள் தெரிவித்தனர்.

"மனிதனை மனிதன் சுமக்கிறான் என்பதே தவறு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வரிசைபடுத்தியுள்ளது இந்து மதம். தெய்வத்திற்கு மேலாக மாதா, பிதா, குரு ஆகியோரை முன்னிலைப் படுத்தியுள்ளது. குரு மகாசன்னிதானம் என்பவர் தெய்வத்திற்கு நிகரானவர். பட்டினப்பிரவேசத்தை யார் வந்து தடுத்தாலும் நாங்கள் சிறப்பாக நடத்துவோம் என பக்தர்கள் சொல்கின்றனர்.


முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியது போல, மாவட்ட விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர்களை - ரசிகர்களும், தேர்தல்களில் வெற்றிபெற்ற வெற்றி வேட்பாளர்களை - தொண்டர்களும், என்று வெற்றி பெற்றவர்களை தொண்டர்களும், ரசிகர்களும் தோளில் தூக்கி கொண்டாடுவதை அனைவரும் பார்க்கிறோம். எனவே இதில் மரியாதை குறைவு என்று எதுவும் கிடையாது. ஏன் கடந்தாண்டுகளில் காவல்துறை தலைவர் பணி ஓய்வு பெறும் நாளன்று, அவர்களின் பிரிவு உபசார நாளன்று அவரது காரை இந்திய காவல்பணி அதிகாரிகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கயிற்றால் சிறிது தூரம் இழுத்து செல்வதை அனைத்து ஊடகங்களிலும் நாம் பார்த்திருக்கிறோம். கவுரவப்படுத்தும் நிகழ்ச்சியாகத்தான் கருதுகிறோம்.

இந்திய அரசியலமைப்பு பிரிவு 25, 26ன் படி, வழங்கியுள்ள மத சுதந்திர உரிமை அடிப்படையில் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செய்வதற்கு தடை விதிக்க முடியாது என்று தருமபுர ஆதீனத்துக்கு ஆதரவான குரல்களும் வலுத்து வருகிறது என்பது உண்மை.

கோட்டாட்சியர் பாலாஜி விதித்த தடை என்று இந்த பிரச்சனையை ஆதினம் தரப்பிலும், பக்தர்கள் தரப்பிலும் நினைக்கவில்லை. ஆளுநர் ரவி மயிலாடுதுறைக்கு பயணம் மேற்கொண்டதும். அவர் தருமபுரம் ஆதீனத்தை பார்த்ததாலும் அரசு கோபத்தில் இருப்பதாகவும். இதனால்தான் இந்த நிகழ்விற்கு தடை என்று மதுரை ஆதீனம் புகார் வைத்துள்ளார்.

தடை விதிக்க வேண்டும் என்றால் பல்வேறு சமய நிகழ்சிகளை வரிசையாக பட்டியல் போட்டுக் கொண்டே போக முடியும்.. தேவையில்லாமல் மத வழிபாடுகளில் அரசியல் உள்நோக்கத்துடன் தலையிடக் கூடாது. "திமுகவின் கொள்கை என்பது வேறு, மக்களின் நம்பிக்கை என்பது வேறு" என்பதை புரிந்து கொண்டு தமிழக அரசு அனைவருக்குமான அரசாக செயல்பட வேண்டும் என சைவசமய சான்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 6 May 2022 10:03 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!