/* */

புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கர்நாடக இசை பாடத்திட்டம்

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் கர்நாடக இசையை (குரல்) அடிப்படை பாடத்திட்டமாக அறிமுகம் செய்துள்ளது.

HIGHLIGHTS

புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கர்நாடக இசை பாடத்திட்டம்
X

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் , மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஓர் அங்கமாக, கர்நாடக இசையை (குரல்) அடிப்படை பாடத்திட்டமாக அறிமுகம் செய்துள்ளது.

இசை என்பது தெய்வீகக் கலையாகும். இசையைக் கேட்பதன் மூலமும், கற்றுக்கொள்வதன் மூலமும் மாணவர்களின் மனஅழுத்தம் குறையும் என்பதோடு, நினைவாற்றலை மேம்படுத்த உதவும் என்ற நோக்கத்துடன் இப்பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களுக்குள் மறைந்திருக்கும் இசைத் திறமையைக் வெளிப்படுத்துவதற்கும், அதனை சிறந்தமுறையில் கற்றுக்கொள்வதற்கும் இது வழிவகுக்கும்.

கழகத்தின் இணைப் பேராசிரியரும் பயிற்சி பெற்ற கர்நாடக இசைக் கலைஞருமான முனைவர் ஏ வெங்கடேசன், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கிறார். தற்போது, ​​14 மாணவர்கள் இந்தப்பாடத்திட்டத்தில் பதிவு செய்து, பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு பாடத்தின் கோட்பாட்டு அம்சங்கள் கற்பிக்கப்பட்டுள்ளது. நடைமுறை பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கூடுதல் தகவல்களுக்கு 75985 66739 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Updated On: 5 Aug 2023 8:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...