/* */

விமானத்தில் 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தல்: இருவர் கைது

துபாய் சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ 1.15 கோடி மதிப்புள்ள தங்க பசை கடத்தியவர்கள் கைது.

HIGHLIGHTS

விமானத்தில் 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தல்: இருவர் கைது
X

சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அந்த விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த 32 வயது ஆண் பயணி ஒருவர், தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றாா்.

ஆனால் சுங்க அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை திருப்பி அழைத்து வந்து சோதனையிட்டனர். அப்போது அவருடைய சூட்கேசுக்குள் மறைத்து வைத்திருந்த மின்னணு சாதனப் பொருட்களை கைப்பற்றினா்.மேலும் அதற்குள் 300 கிராம் எடையுடைய தங்க கட்டி ஒன்றும் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.அந்த தங்கக்கட்டியின் மதிப்பு ரூ.15 லட்சம்.அதோடு அவரிடமிருந்த மின்னணு சாதனப்பொருட்களின் மதிப்பு ரூ.26 லட்சம். இதையடுத்து ரூ.41 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம்,மின்னணு சாதனப்பொருட்களை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்தனா்.

இந்நிலையில் துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்,சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த 29 வயது ஆண் பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதித்தனர்.அவருடைய உடமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனா். அவருடைய உள்ளாடைக்குள் 2 பாா்சல்கள் மறைத்து வைத்திருந்தாா். அதை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் தங்க பசை இருந்ததை கண்டுபிடித்தனா்.இரு பாா்சல்களிலும் 1.5 தங்கப்பசை இருந்தது.அதன் சா்வதேச மதிப்பு ரூ.74 லட்சம்.இதையடுத்து தங்கப்பசையை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா்,கடத்தல் பயணியை கைது செய்தனா்.

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் ரூ.89 லட்சம் மதிப்புடைய 1.8 கிலோ தங்கம், ரூ.26 லட்சம் மதிப்புடைய மின்னணு சாதன கடத்தல் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ரூ.1.15 கோடி மதிப்புடைய கடத்தல் தங்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 27 March 2022 9:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  2. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  4. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  5. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  6. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  7. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  8. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  9. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  10. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...