/* */

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் காய்ச்சலால் உடல் நலம் பாதிப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் காய்ச்சலால் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் காய்ச்சலால் உடல் நலம் பாதிப்பு
X

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திடீர் என காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தி.மு.க. தலைவர் மற்றும் தமிழக முதல் அமைச்சராக இருப்பவர் மு.க. ஸ்டாலின். இவருக்கு நேற்று திடீர் என காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஸ்டாலினுக்கு ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிப்பட்ட மருத்துவரும், மெட்ராஸ் இ.என்.டி. மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமை மருத்துவ அதிகாரியுமான மோகன் காமேஸ்வரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று திடீர் என காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகள் இருந்தன. இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் அவருக்கு வைரல் ப்ளூ காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே முதல்வர் ஸ்டாலின் காய்ச்சலுக்கான சிகிச்சை மேற்கொள்ளுமாறும், அடுத்த சில நாட்களுக்கு ஓய்வில் இருக்கும் படியும் அறிவறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

காய்ச்சல் காரணமாக அடுத்த சில நாட்கள் முதல்வர் ஸ்டாலின் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறுவார். அவர் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 5 Nov 2023 5:54 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...