/* */

தீபாவளி மெசேஜ்: க்ளிக் செய்தால் வங்கி கணக்கு காலி!

போலியாக சில இணையதளங்கள் தீபாவளி வாழ்த்துக்களை அனுப்பி அதில் உள்ள லிங்கை கிளிக் செய்தால் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் மோசடியை செய்து வருகின்றன

HIGHLIGHTS

தீபாவளி மெசேஜ்: க்ளிக் செய்தால் வங்கி கணக்கு காலி!
X

பிரபல நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை அனுப்பும் என்பதும் தெரிந்ததே. ஆனால் தற்போது போலியாக சில இணையதளங்கள் தீபாவளி வாழ்த்துக்களை அனுப்பி, அதில் உள்ள லிங்கை கிளிக் செய்தால் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்யும் நடைமுறையை செய்து வருகின்றன என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தீபாவளி நேரத்தில் சிறப்பு பரிசுகள் கொடுப்பதாகவும் தீபாவளி வாழ்த்துக்கள் கூறுவதாகவும் மெசேஜ்கள் பலருக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த மெசேஜில் உள்ள லிங்க்கை கிளிக் செய்தால் மோசடி செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய அரசின் இணைய பாதுகாப்பு குழுவும் எச்சரித்துள்ளது.

சில போலியான இணையதளங்கள், சீனாவில் இருந்து செயல்படும் சில இணையதளங்கள் போலியான தீபாவளி செய்திகளை ஒருசிலரை குறிவைத்து அனுப்புவதாகவும் குறிப்பாக பெண்களுக்கே இந்த இணைப்புகள் அதிகம் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பை கிளிக் செய்தால் அதில் தீபாவளி பரிசுகளை பெறும் வகையில் விவரங்கள் இருக்கும். அதில் உங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி விவரங்கள் கேட்கப்பட்டால் அதை யாரும் தர வேண்டாம் என்று இந்திய அரசின் இணைய பாதுகாப்பு குழு அறிவுறுத்தி உள்ளது.

அவ்வாறு தீபாவளி வாழ்த்துக்கள் அடங்கிய மெசேஜை கிளிக் செய்து, உங்கள் தனிப்பட்ட தகவலை தந்தால் உங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் எடுத்து விடுவார்கள். எனவே இந்த மோசடியில் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னணி நகை நிறுவனத்தின் லோகோ, ஜவுளி நிறுவனத்தின் லோகோக்களை கொண்டு போலியான இணையதளம் மூலம் சமீபகாலமாக சில வாடிக்கையாளர்களுக்கு இது போன்ற போலியான மெசேஜ்களை அனுப்பப்பட்டு வருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சமூக வலைதளங்களில் வரும் தீபாவளி மெசேஜ்கள் சம்பந்தமில்லாத நபரிடமிருந்து வந்தால் அதை உடனடியாக டெலிட் செய்ய வேண்டும் என்றும் குறிப்பாக வாழ்த்து மெசேஜில் லிங்க் இருந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

தீபாவளிப் பரிசு என்ற ஆசையை காட்டி உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் திருடுவதற்கு என்றே ஒரு கூட்டம் கிளம்பி உள்ளது என்றும் தீபாவளியை சந்தோசமாக கொண்டாட திட்டமிட்டுள்ள இந்த நேரத்தில் இந்த மோசடியில் சிக்கி கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற மோசடிகளில் இருந்து பாதுகாக்க நமக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் குறிப்பாக யாராக இருந்தாலும் வங்கி கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் லிங்குகளை கவனமாக படித்து அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்த பின்னரே கிளிக் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 23 Oct 2022 3:38 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...