/* */

உச்சத்திற்கு சென்றது பீன்ஸ் விலை: ஒரு கிலோ ரூ.150 முதல் 200 க்கு விற்பனை

உச்சத்திற்கு சென்றது பீன்ஸ் விலை: ஒரு கிலோ ரூ.150 முதல் 200 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

கோடை வெயில் அதிகரித்துவிட்ட நிலையில் தமிழகத்தில் சில காய்கறிகளின் விலையும் அதிகரித்து உள்ளது. பீன்ஸ் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படுவது நம்முடைய கோயம்பேடு மார்க்கெட்தான். ஏனென்றால், இங்கு 1000-க்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக்கடைகள், 2000-க்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் என பிரம்மாண்டமாக செயல்பட்டு வருகின்றன.

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்டட லாரிகளில் காய்கறிகள் வந்து குவிவது தினசரி வாடிக்கையாகும். அதனால்தான், இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் விற்பனை நடக்கிறது.. இப்போது கோடை காலம் துவங்கியிருக்கும் சூழலில், காய்கறிகள், பழங்களின் வரத்துகள் அதிகமாக துவங்கியுள்ளன.. அதனால், நள்ளிரவு முதல் விடிகாலை வரை படுபஸியாக வாகன போக்குவரத்து காணப்படுகின்றன.

குறிப்பாக தர்பூசணி, மாங்காய், மாம்பழம் போன்ற பொருட்களின் வரத்து அதிகரித்துள்ளதாம். அதேபோல, கடந்த வாரம் பூக்களின் விலை கணிசமாக குறைந்த நிலையில், நேற்றைய தினம் பூக்கள் விலை அதிகரித்துவிட்டது..

காய்கறிகள் நேற்றைய தினம், அவரைக்காய் கிலோ 40 - 50 ரூபாய், பீன்ஸ் கிலோ 130 - 150 ரூபாய், பீட்ரூட் 25 - 50 ரூபாய், பாகற்காய் 20 - 30 ரூபாய், கத்தரிக்காய் 10 - 25 ரூபாய், முட்டைக்கோஸ் 18 - 22 ரூபாய், கேரட் 40 - 60 ரூபாய், காலிஃபிளவர் 10 - 15 ரூபாய், சௌ சௌ 25 - 30 ரூபாய், முருங்கைக்காய் 15 - 25 ரூபாய், பூண்டு 198 - 218 ரூபாய், இஞ்சி 110 - 120 ரூபாய், வெண்டைக்காய் கிலோ 20 - 30 ரூபாய், உருளைக்கிழங்கு கிலோ 23 - 39 ரூபாய், முள்ளங்கி கிலோ 20 - 25 ரூபாய், தக்காளி கிலோ 15 - 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றைய காய்கறி நிலைவரம்: காய்கறிகள் (கிலோவில்) முதல் ரகம் 2ம் ரகம் 3ம் ரகம் வெங்காயம் 22 ரூபாய் 18 ரூபாய் 15 ரூபாய் .தக்காளி 22 ரூபாய் 20 ரூபாய் 15 ரூபாய். நவீன் தக்காளி 40 ரூபாய் .உருளை 30 ரூபாய், 28 ரூபாய் 25 ரூபாய். ஊட்டி கேரட் 70 ரூபாய் 65 ரூபாய் 60 ரூபாய் .சின்ன வெங்காயம் 45 ரூபாய் 35 ரூபாய் 30 ரூபாய். பெங்களூர் கேரட் 40 ரூபாய் 35 ரூபாய் - பீன்ஸ் 200ரூபாய் 180 ரூபாய் , ஊட்டி பீட்ரூட் 50 ரூபாய் 40 ரூபாய், கர்நாடகா பீட்ரூட் 30 ரூபாய் 25 ரூபாய் - சவ் சவ் 35 ரூபாய் 30 ரூபாய் , முள்ளங்கி 40 ரூபாய் 35 ரூபாய் - முட்டை கோஸ் 35 ரூபாய் 30 ரூபாய் , வெண்டைக்காய் 25 ரூபாய் 20 ரூபாய் , உஜாலா கத்திரிக்காய் 25 ரூபாய் 20 ரூபாய் -, வரி கத்திரி 15 ரூபாய் 13 ரூபாய் - காராமணி 30 ரூபாய் 25 ரூபாய், பாகற்காய் 35 ரூபாய் 25 ரூபாய் - புடலங்காய் 40 ரூபாய் 30 ரூபாய் - சுரைக்காய் 25 ரூபாய் 20 ரூபாய் - சேனைக்கிழங்கு '68 ரூபாய் 65 ரூபாய்.

முருங்கைக்காய் 30 ரூபாய் 20 ரூபாய் - சேமங்கிழங்கு 40 ரூபாய் 35 ரூபாய் காலிபிளவர் 25 ரூபாய் 20 ரூபாய் - பச்சை மிளகாய் 50 ரூபாய் 40 ரூபாய் - அவரைக்காய் 50 ரூபாய் 40 ரூபாய் - பச்சைகுடைமிளகாய் 55 ரூபாய் 50 ரூபாய் - வண்ண குடை மிளகாய் 90 ரூபாய் மாங்காய் 40 ரூபாய் 35 ரூபாய் வெள்ளரிக்காய் 30 ரூபாய் 25 ரூபாய் - பட்டாணி 100 ரூபாய் 90 ரூபாய் - இஞ்சி 140 ரூபாய் 130 ரூபாய் 120 ரூபாய் பூண்டு 210 ரூபாய் 180 ரூபாய் - மஞ்சள் பூசணி 30 ரூபாய் 25 ரூபாய் - வெள்ளை பூசணி 15 ரூபாய் - - பீர்க்கங்காய் 40 ரூபாய் 30 ரூபாய் - எலுமிச்சை 100 ரூபாய் 105 ரூபாய் - நூக்கல் 25 ரூபாய் 20 ரூபாய் - கோவைக்காய் 30 ரூபாய் 25 ரூபாய் - கொத்தவரங்காய் 40 ரூபாய் 35 ரூபாய் - வாழைக்காய் 7 ரூபாய் 5 ரூபாய் - வாழைத்தண்டு 35 ரூபாய் 30 ரூபாய் - வாழைப்பூ 30 ரூபாய் 25 ரூபாய் - அனைத்து கீரை 8 ரூபாய் - - தேங்காய் 35 ரூபாய் 34 ரூபாய்.

திருச்சியில் இன்று பீன்ஸ் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Updated On: 21 April 2024 3:07 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!