/* */

08047104600 இது என்ன எண் ?

பெங்களூர் ஸ்ரீ சத்யாசாய் பொது மருத்துவமனை ஒயிட் பீல்டு எண்ணுக்கு கால் செய்தால் முதலில் கம்ப்யூட்டர் வாய்சில் உங்கள் எண் பதிவாகி விடும்.

HIGHLIGHTS

08047104600 இது என்ன எண் ?
X

பைல் படம்.

மனித உயிர்களுக்கு நடுத்தர வர்க்கத்திற்கு வாழ்க்கையில் வரும் உடல்நலகுறைபாடு ஆபரேசன் பல லட்சம் செலவாகும் என்ற நிலை வரும்போது தலை சுற்றி கண் கலங்கி விடும். அப்போது கடவுளே எங்களுக்கு ஏன் இந்த சோதனை? என்று குழம்பாமல் பெங்களூர் ஸ்ரீ சத்யா சாய் பொது மருத்துவமனை ஒயிட் பீல்டு எண்ணுக்கு கால் செய்தால் முதலில் கம்ப்யூட்டர் வாய்சில் உங்கள் எண் பதிவாகி விடும்.

அடுத்து அவர்களே கால் செய்து நமது விருப்ப மொழியிலேயே என்ன உடல்நலக்குறைபாடு உள்ளது என கேட்டறிந்து, அது சம்பந்தமான டெஸ்ட் ரிப்போர்ட் என்ன உள்ளது என்பதை கேட்டு அங்குள்ள வரிசைப்படி உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட தருவார்கள். அப்பாயின்மெண்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வரும்.

அதன் விபரப்படி நோய்வாய்ப்பட்டவருடன் ஒரு அட்டண்டர் மட்டுமே கேட்டில் அனுமதிப்பார்கள். அந்த தேதி முதல் உங்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் ஆலோசனை அறிவுரை கிடைக்கும். ஒரு பைசா செலவில்லாமல் சிகிச்சை ஆபரேசன் தேவையென்றால் அட்மிஷன் செய்து நோயாளிக்கு மட்டும் உணவு மருந்து அனைத்தும் அவர்களே இலவசமாக உலகத் தரத்தில் செய்வார்கள்.இது மருத்துவமனை அல்ல கோவில்.

இதனுள் நமக்கு அட்மிஷன் கிடைத்துவிட்டால் அவர்களுக்கு மறுபிறவி தான் சந்தேகம் இல்லை. இலவசமாகவே அவ்வளவு வசதி செய்து தருகின்றனர். மற்றுமொரு விசயம், இதன் அருமைகளை அதிகமாக வங்கதேசம், ஒரிசா, கல்கத்தா, நேபாள், பீகார் என வெளிமாநிலத்தவர்களே பலனடைகின்றனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மக்கள் வெறும் 5 சதவிகிதம் பேரே பலன் பெறுகின்றனர். இந்த வாய்ப்புகளை ஏழை, நடுத்தர குடும்பத்தினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Updated On: 14 Sep 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு