/* */

யோகா, இயற்கை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

பி.என்.ஒய்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தனித்தனியாக தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

யோகா, இயற்கை மருத்துவப் படிப்புக்கான  விண்ணப்பங்கள் வரவேற்பு
X

பைல் படம்

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம்,அரும்பாக்கம், சென்னை 2023-2024-ம் கல்வியாண்டிற்கான பி.என்.ஒய்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2023-2024–ம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு & அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்.ஒய்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பு (ஐந்தரை ஆண்டுகள்) சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தனித்தனியாக தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி : +2

மேற்கண்ட பட்டப் படிப்புகளுக்கான (விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் ஆணையர்க அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த ஆயுஷ்முறை மருத்துவக் கல்லூரிகளிலோ வழங்கப்படமாட்டாது.) மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள்., கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம். கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 14.08.2023 மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பித்தல் / வந்து சேர வேண்டும்.

30.07.2023 முதல் 14.08.2023 மாலை 5.00 மணி வரை விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்யலாம்.

14.08.2023 மாலை 5.30 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாக அல்லது நேரில் சமர்ப்பிக்கலாம்.

Updated On: 29 July 2023 5:47 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்