/* */

21 வயதுக்குள்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க வழங்க சேவை செய்ய அரசு தடை விதிப்பு

21 வயதுக்குள்பட்டவர்களுக்கு மதுபானம் வழங்காமல் இருப்பதை உறுதி செய்ய காவல் துறை மதுபான கடை, பார்களில் ஆய்வு நடத்துவர்

HIGHLIGHTS

21 வயதுக்குள்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க வழங்க  சேவை செய்ய அரசு  தடை விதிப்பு
X

பைல் படம்

அனைத்து மதுபான கடை மற்றும் கூடங்களில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கவோ, வழங்கவோ, சேவை செய்யவோ கூடாது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தபோது மதுவிலக்கு என்பது மகாத்மா காந்தியடிகளின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக இருந்தது. 1937ஆம் ஆண்டு மதராஸ் மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் முதன்முதலாக மதுவிலக்கை அமல்படுத்தினார். பின்னர் அதனை சித்தூர், கடப்பா, வட ஆற்காடு மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தினார்.

அதற்கு பின்னர் மதராஸ் மாகாண முதல்வரான ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் மாகணம் முழுவதும் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தினார். இதனால் மதராஸ் மாகாணம் முழுவதும் செயல்பட்டு வந்த சாராயக் கடைகளும் கள்ளுக்கடைகளும் மூடப்பட்டன. பின்னர் வந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களில் சில மருத்துவ தேவைகளுக்காக மட்டும் மருத்துவர்களின் அனுமதியை பெற்று அரசின் பெர்மிட் வாங்கி மது அருந்தலாம் என்ற தளர்வால் பணக்காரர்கள் பலர் பெர்மிட் வாங்கி மது அருந்த தொடங்கினர். கள்ளச்சாராய கண்காணிப்புக்கும், கள்ளச்சாராய ஒழிப்புக்கும் அதிக நிதியை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் அண்ணா மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி தமிழ்நாடு அரசின் நிதிநிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டியும் மதுவிலக்கு கொள்கையை பின்பற்றுவதால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுகட்டவும் நிதி ஆதாரம் தேவையின் அவசியம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார்.

மதுவிலக்கை இனி புதிதாக அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி அளிக்க முடியும் என மறுத்தார் இந்திரா காந்தி. அவரது இந்த முடிவால் கடும் அதிருப்தி அடைந்த கருணாநிதி 1971-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி மதுவிலக்கு சட்டத்தை தளர்த்தி கள் மற்றும் சாராய கடைகள் செயல்பட அனுமதி அளித்தார். ஒரு லிட்டர் சாராயம் பத்து ரூபாய்க்கும், ஒரு லிட்டர் கள் ஒரு ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு தாலுகா வாரியாக 139 மொத்த வியாபாரிகள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் மூலமாக சில்லறை வியாபாரிகளுக்கு கள் மற்றும் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த முடிவால் ஆண்டுக்கு 26 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்தது. மது விலக்கு சட்டம் தளர்வால் கருணாநிதி அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் 1974-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி மீண்டும் பூரண மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தினார் கருணாநிதி.

1977ஆம் ஆண்டு தமிழக முதல்வரான எம்ஜிஆர், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை 3 வரை சிறையில் அடைக்கும் சட்டத்தை நிறைவேற்றினார். தமிழக அரசின் நிதி வருவாய் கடுமையாக குறைந்த நிலையில் 1981ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைமுறையில் இருந்த பூரண மதுவிலக்கு சட்டத்தை தளர்த்தினார் எம்ஜிஆர். வெளிநாட்டு வகை மதுவகைகளை தயாரிக்க 10 நிறுவனங்களுக்கு தயாரிப்பு உரிமங்களை வழங்கினார்.

மது விற்பனையை ஒழுங்குப்படுத்தி வருவாய் அளவை உயர்த்தும் நோக்கோடு இந்திய நிறுவனச் சட்டம் 1956-இன் கீழ் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (Tamil Nadu State Marketing Corporation-TASMAC) – நிறுவனத்தை எம்ஜிஆர் தொடங்கினார். தமிழகம் முழுவதும் மது வகைகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யும் ஏக போக உரிமையை டாஸ்மாக் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழகத்தில் தயாரிக்கப்படும் மது உற்பத்திஇ மொத்த மற்றும் சில்லறை விற்பனையை டாஸ்மாக் நிறுவனம் கட்டுபட்டுத்தி வருகிறது. சில்லறை விற்பனையை மதுவிற்பனை செய்வதற்கான அனுமதியை அரசுக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டுமே வழங்கியதால் எம்ஜிஆர் அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் 1989ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கருணாநிதி அரசு டாஸ்மாக் நிறுவன விற்பனையில் மலிவு விலை மது விற்பனையை அறிமுகம் செய்தது. மலிவு விலையில் மதுவை விற்பனை செய்வதற்காகவே TAMILNADU SPIRIT CORPORATION- உருவாக்கப்பட்டது. இந்த பிரச்னை 1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் எதிரொலித்தது. 1991ஆம் ஆண்டில் மலிவு விலை மது விற்பனையை ரத்து செய்த ஜெயலலிதா விஸ்கி, பிராண்டி, பீர் உள்ளிட்ட வெளிநாட்டு மதுபானங்களின் இந்திய தயாரிப்புக்கு தொடர்ந்து அனுமதி வழங்கினார்.

. 2001-ஆம் ஆண்டில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது 4500 மதுக்கடைகள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் 2003-ஆம் ஆண்டில் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்த ஜெயலலிதா. சில்லறை விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதன் காரணமாக அரசுக்கு மதுவிற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்ததால் அடுத்தடுத்து வந்த அரசுகளும் இதையோ தொடர்ந்தன. இந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலில் பூரண மதுவிலக்கு கோரிக்கை விஸ்வரூபம் எடுத்தது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி காந்தியவாதி சசிபெருமாள் போராட்டத்தின்போதே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது.

பூரண மதுவிலக்கு கோரிக்கையை பாமக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே வலுவாக பேசி வந்த நிலையில் 2016 திமுக தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பும் வெளியானது.

இந்த நிலையில் 2016 தேர்தலில் ஆட்சியமைத்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு முதற்கட்டமாக சில நூறு மதுக்கடைகளை மூடினாலும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு படிப்படியான மதுவிலக்கு என்ற தேர்தல் அறிக்கை அறிவிப்பு கண்டுகொள்ளப்படவில்லை. இந்த நிலையில் அடுத்து வந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் முன்பு குறிப்பிடப்பட்டிருந்த பூரண மதுவிலக்கு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இதே நிலைதான் தொடர்ந்து, திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், மதிமுகவின் தேர்தல் அறிக்கைகளிலும்இ அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, பாஜக தேர்தல் அறிக்கையிலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசை வலியுறுத்துவோம் என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது.

1983ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு 183 கோடியாக இருந்த நிலையில் 2019ஆம் ஆண்டு டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் 21 ஆயிரத்து 828 கோடியாகவும் 2020ஆம் ஆண்டில் 30ஆயிரம் கோடியாகவும் அதிகரித்துள்ளது. மதுவின் மீது அரசு விதிக்கும் வரியின் மூலமும்இ பார் உரிமங்களை தனியாருக்கு ஏலம் விடுவதன் மூலமும் தனியாக தமிழக அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. தமிழ்நாடு நிதி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வருவாய் டாஸ்மாக் கடைகள் மூலமே தமிழக அரசு ஈட்டி வரும் நிலையில் தமிழ்நாட்டில் மது விற்பனையை குறைத்து சுற்றுலா உள்ளிட்ட துறைகளை மேம்படுத்து அதன்மூலம் மாற்று வருவாயை தமிழக அரசு ஈட்ட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

21 வயதுக்குள்பட்டவர்களுக்கு மதுபானங்கேள் விற்பனை செய்யத்தடை செய்து தமிழக அரசு உத்தரவு:

இச்சூழலில், தமிழக அரசு வியப்பளிக்கும் உத்தரவை தற்போது பிறப்ப்பித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981-யின் துணை விதி 26 (ஓஏ)-இன் படி, டாஸ்மாக் மதுபானக் கடைகள் FL1/FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL11 உரிம கடைகள் மற்றும் பார்கள் ஆகியவற்றில் 21 வயதுக்குள்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கவோ, வழங்கவோ, சேவை செய்யவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுஇ அனைத்து மதுபான கடை மற்றும் கூடங்களில் 21 வயதுக்குள்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கவோ, வழங்கவோ, சேவை செய்யவோ கூடாது எனவும், இவ்விதி தொடர்பாக விளம்பர பலகை வைத்திடவேண்டும்.

மேலும் 21 வயதுக்குள்பட்டவர்களுக்கு மதுபானம் வழங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட காவல் துறையினருடன் இணைந்து மதுபான கடை மற்றும் கூடங்களில் ஆய்வு நடத்தவும் சென்னை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க 1.காவல் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை, 2.கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு, புதுக்கோட்டை, 3.மாவட்ட மேலாளர், டாஸ்மாக், புதுக்கோட்டை மற்றும் 4.கோட்ட கலால் அலுவலர், புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகியோரை கோரப்பட்டுள்ளது என மாவட்ட புதுரக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Oct 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!