/* */

விஜயபாஸ்கர் உள்பட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து

விஜயபாஸ்கர் உள்பட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

விஜயபாஸ்கர் உள்பட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
X

சென்னை உயர்நீதி மன்றம் (கோப்பு படம்).

முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுகவினருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசை கண்டித்தும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவை கண்டித்தும், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி, கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில் அதிமுக சார்பில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவும், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்பட 11 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, ஜனநாயக முறையில் நடந்த கூட்டத்தை சட்டவிரோதமாக கூடிய குற்றமாக கருத முடியாது எனவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்பட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Updated On: 16 Feb 2024 2:32 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மனதை நொறுக்கிய MI ! "7 தொடர் தோல்விகள்" !#mi #mumbaiindians...
  2. வீடியோ
    கோடை விடுமுறை கொடைக்கானலில் குவிந்த மக்கள் !#summer #holiday #vacation...
  3. வீடியோ
    Happy Birthday Ajithkumar 🥳🎂 !#ajithkumar #ajith #happybirthday...
  4. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  5. நாமக்கல்
    குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப
  6. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  7. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  10. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி